
தமிழ் சினிமாவின் இல்லை தென்னக சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்றால் அது நயன்தாரா தான் இவற் நடிக்கும் படங்கள் முன்னணி ஹீரோகள் படங்களை விட வசூல் மட்டும் இல்லாமல் தரமான புதுமையான கதையம்சம் கொண்டபடங்கலாக இருப்பதால் வெற்றி அதோடு லாபமும் கொட்டுகிறது இவர் ஒரு கதையை தேர்ந்தெடுக்கிறார் என்றால் அது மிகவும் சரியான கதை என்று கண்ணை மூடி கொண்டு சொல்லலாம் அந்த வரிசையில் இவர் யார் வாழ்கை வரலாற்றில் நடிக்கிறார் தெரியுமா
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக் படம்தான் இப்போது தமிழ் சினிமாவில் ஹாட் டாபிக்காக உள்ளது. ஏற்கனவே பாரதிராஜா, பிரியதர்ஷினி, ஏ.எல்.விஜய் ஆகியோர் ஜெயலலிதாவின் பயோபிக் படத்தை இயக்க உள்ளதாக சொல்லியிருக்கும் நிலையில் தற்போது இயக்குனர் லிங்குசாமியும் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படத்தை சசிகலாவின் உறவினரான திவாகரனின் மகன் ஜெயானந்த் தயாரிக்க உள்ளதாகவும், அதை லிங்குசாமி இயக்க உள்ளார் என்றும் ஜெயானந்த் அறிவித்தார். இந்த நிலையில் ஜெயலலிதாவாக நடிக்க நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அவர்தான் நிச்சயமாக நடிப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
சினிமாவில் பல தடைகளைத் தாண்டி வெற்றிபெற்று லேடி சூப்பர்ஸ்டாராக கெத்து காட்டிக்கொண்டிருப்பவர் நயன். அறம் படத்தில் கலெக்டராக நடித்ததற்கு பாராட்டுக்கள் குவிந்தன. கம்பீரமான நடை, எதையும் தாங்கும் மனவலிமை என ஜெயலலிதாவின் பல குணங்கள் நயன்தாராவிடம் உள்ளது. அதனால் அவர் நடித்தால் நிச்சயம் பொருத்தமாக இருக்கும் என சினிமா ஆர்வளர்கள் கருதுகின்றனர். இப்படத்திற்க்கு ஏகப்பட்ட போட்டி இருப்பதால், தேசிய அளவில் முக்கிய புள்ளிகளை அணுகி ஜெயலலிதாவைப் பற்றிய சுவாராஸ்யமான தகவல்களை சேகரித்து வருகிறாராம் லிங்கு. சண்டக்கோழி 3 திரைப்படம் துவங்குவதற்கு முன்பு ஜெயலலிதா பயோபிக் ஆரம்பிப்பார் எனத் தெரிகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கலாம்.
