Thursday, October 29
Shadow

பாடகி என். சி. வசந்தகோகிலம் மறைந்த தினம்

இவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் கவியோகி சுத்தானந்த பாரதியாரின் பாடல்களைப் பிரபலமாக்கியவர். இவர் 1951 இல் காச நோய் வாய்ப்பட்டு இறந்தார்.

வசந்தகோகிலம் கொச்சியில் இரிஞ்ஞாலகுடா (இன்றைய கேரளாவில்) சந்திரசேகர ஐயர் என்பவருக்குப் பிறந்தார். இவரது இயற்பெயர் காமாட்சி ஆகும். இவரது குடும்பம் நாகப்பட்டினத்திற்குக் குடிபெயர்ந்தது. நாகப்பட்டினம் ‘ஜால்ரா’ கோபால ஐயர் என்பவரிடம் இசைப் பயிற்சி பெற்றார். 1936 இல் இவரது குடும்பம் சென்னைக்கு இடம் பெயர்ந்தது. சென்னையில் கச்சேரிகளில் பாடத் தொடங்கினார். சென்னை இசைக் கல்லூரியில் 1938 இல் அரியக்குடி இராமானுஜ ஐயங்கார் தலைமையில் நடந்த ஆண்டு விழாவில் பாடி முதல் பரிசைப் பெற்றார்.

வசந்தகோகிலம் பல தமிழ்ப் பாடல்களைப் பாடிப் புகழ் பெற்றார். சென்னையில் தமிழ் இசைச் சங்கம், நெல்லை சங்கீத சபை ஆகியவற்றில் தொடர்ச்சியாகப் பாடி வந்தார். இவரது கருநாடக, மெல்லிசைப் பாடல்கள் பல இசைத்தட்டுகளாக வெளிவந்துள்ளன.

பிரபல பாடகர் டைகர் வரதாச்சாரியார் இவருக்கு “மதுரகீத வாணி” என்ற பட்டம் சூட்டினார்.

வசந்தகோகிலம் தமிழ்த் திரைப்படங்களில் பாடியும், நடித்தும் உள்ளார். 1940 இல் சி. கே. சக்தியி