Saturday, June 27
Shadow

கமல்ஹாசன்மற்றும் ஷங்கருடன் இணையும் சிம்பு…!!!

இந்தியன் படத்தின் அடுத்த பாகமாக இந்தியன் 2 உருவாக இருக்கிறது.டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக செட் அமைக்கும் பணி கடந்த வாரம் தொடங்கியது.

சிம்பு இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்றும், கமலுக்கு வில்லனாக வருவார் என்றும் செய்தி வருகிறது. ‌ஷங்கர் படங்களில் கதாநாயகர்களுக்கு சமமாக வில்லன்களுக்கும் முக்கியத்துவம் தரப்படும். இந்தியன் முதல் பாகத்தில் தந்தை கமலுக்கு மகன் கமலே வில்லனாக அமைந்திருப்பார்.

முதல் பாகத்தின் கதையே லஞ்சத்துக்கு எதிரானதாக இருந்தது. இரண்டாம் பாகம் ஊழலுக்கு எதிரான படமாக இருக்கும் என்கிறார்கள். 21 ஆண்டுகள் கழித்து திரும்பும் சேனாபதி, நாடு முழுவதும் பரவியுள்ள ஊழலை ஒழிப்பதே கதை என்கிறார்கள்.