
அமித் பார்கவ் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார். தமிழ், கன்னடம், இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். கன்னடத்தில் ஒளிபரப்பான சீதை தொலைக்காட்சித் தொடரில் ஏற்ற இராமர் வேடத்தின் வாயிலாக புகழ்பெற்றார். அபிசேக் வர்மன் இயக்கிய2 ஸ்டேட்ஸ் திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார். கல்யாணம் முதல் காதல் வரை தொலைக்காட்சித் தொடரில் அர்ஜுன் என்ற வேடத்தில் நடித்துள்ளார். தமிழில், என்னை அறிந்தால் (2015), மிருதன் (2016) உள்ளிட்ட திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், கன்னட மொழித் திரைப்படங்களில் பின்னணிக் குரல் கொடுப்பவராகவும் பணியாற்றியுள்ளார்.
இவர் நடித்த திரைப்படங்கள்
விழி மூடி யோசித்தால், என்னமோ ஏதோ, என்னை அறிந்தால், மிருதன், குற்றம் 23, கர்ஜனை
