
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்சய்குமார் நடிப்பில் நாளை வெளியாக இருக்கு படம் 2.0 இதனால் இந்த படத்தின் விளம்பரத்துக்காக மாநில மாநிலமாக சென்று படத்தை விளம்பர செய்யும் பட குழு காரணம் இந்த படம் மூன்று மொழிகளில் வெளியாகிறது. நேற்று முன் தினம் ஆந்திரா நேற்று மும்பை என பறந்து விளம்பரம் செய்து வருகின்றனர்.
பாலிவுட் நடிகரான அக்சய்குமார், ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். அதுவும் பல கெட்டப்புகளில் அவர் நடித்திருக்கிறார். அதனால் அவரை முன்னிறுத்தி வட இந்தியாவில் 2.0 விளம்பரங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்நிலையில், ரஜினி, ஷங்கருடன் பணியாற்றியது ரொம்ப சுவராஸ்யமாக இருந்ததாக கூறியுள்ள அக்சய்குமார், மீண்டும் பள்ளிக்கு சென்றது போல் தான் உணர்ந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், ஒவ்வொரு நாளும் எனது வேடத்தில் நடிக்க என்னை தயார்படுத்தவே 3 மணி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது என்று கூறும் அக்சய்குமார், நான் இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்தபோதும், ரஜினி நடித்துள்ள ரொமான்ஸ் வேடம் தான் என்னை அதிகம் கவர்ந்த வேடம். அந்த வேடத்தில் நடிக்கவிரும்பினேன் என்று கூறியிருக்கிறார்.
