பொதுவாக தமிழ் சினிமாவில் பலருக்கு குழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை ஏன் இப்படி சொல்லுகிறேன் என்று தானே நினைக்குறிங்க ஆமாங்க ரஜினிகாந்த் கமல்ஹாசன் மற்றும் விஜய் இவர்களுக்கு தமிழக அரசியல் வேண்டும் அதே சமயத்தில் அரசியலும் வேண்டும் என்பது தான் கமல் அரசியல்வந்த பின்னும் நடிப்பை தொடருகிறார் ரஜினிகாந்த் புலி வருது என்ற கதை போல நான் அரசியலுக்கு ரஜினிகாந்த் வந்துவிட்டேன் இன்னும் தயாராகவில்லை ஆனால் தொடர்ந்து படங்கள் அறிவிப்பு மட்டும் வந்தவண்ணம் உள்ளது வருடத்துக்கு ஒரு படம் நடித்த ரஜினிகாந்த் தற்போது மூன்று படங்கள் நடிக்க ஆரம்பித்து விட்டார்
ரஜினிகாந்த் நடித்து இந்த ஆண்டில் ஜுன் மாதத்தில் ‘காலா’ படம் வெளிவந்தது. அடுத்து நாளை மறுநாள் ‘2.0’ படம் வெளிவர இருக்கிறது. பொங்கலுக்கு ‘பேட்ட’ படம் வருகிறது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு இப்படி அடுத்தடுத்து ரஜினிகாந்த் படம் வெளியாகிறது.
ஒரு படம் முடிந்தவுடன் தான் ரஜினிகாந்த் அடுத்த படத்தில் நடிப்பதை சமீப வருடங்களாக வைத்திருந்தார். ஆனால், ‘கபாலி’ படத்தில் நடிக்க ஆரம்பித்த சில மாதங்களில் ‘2.0’ படத்தில் நடிக்க ஆரம்பித்தார். ‘2.0’ படத்தில் நடித்து முடிப்பதற்குள் ‘காலா’ படத்தில் நடிக்க ஆரம்பித்தார். ‘கபாலி, காலா’ ஆகிய படங்கள், ‘2.0’ படத்திற்கு முன்னதாகவே வெளிவந்தன.
‘2.0’ படம் வெளிவருவதற்குள் ‘பேட்ட’ படத்திலும் நடித்து முடித்துவிட்டார். ‘2.0’ படம் ஆரம்பித்து வெளிவருவதற்குள் ரஜினிகாந்த் நடித்து முடித்த படங்கள் ‘கபாலி, காலா, பேட்ட’. ரஜினிகாந்த் அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ‘பேட்ட’ படம் வெளிவந்த பின் ரஜினிகாந்த் அடுத்து படத்தில் நடிப்பாரா, பாலிடிக்சில் இறங்குவாரா என்பது தெரியவில்லை.
அடுத்த வருடம் மே மாதம் பார்லிமென்ட் தேர்தல் வேறு வர இருக்கிறது. ஜனவரி மாதம் ரஜினியின் அடுத்த படத்தை ஆரம்பித்தால் நான்கு மாதங்களுக்குள் முடிக்க வாய்ப்பில்லை. எப்படியும் ரஜினி, பார்லிமென்ட் தேர்தலுக்கு பிரச்சாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் முழுமையாக அரசியலில் இறங்கவில்லை என்று ரஜினி கூறி வந்தாலும் அவருடைய பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதியன்று நிச்சயம் அரசியல் கட்சி குறித்து அறிவிக்கலாம் என்றும் சிலர் கூறுகிறார்கள்.
தெலுங்கில் பவன் கல்யாண் அரசியலில் இறங்கிய பின், இனி படங்களில் நடிக்க மாட்டேன் என அறிவித்துவிட்டார். ஆனால், தமிழில் அரசியல் ஆசையில் இருக்கும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது