
ராகவன், மலையாளத் திரைப்பட நடிகர் ஆவார். 1941 டிசம்பர் 12-ல் ஆலிங்கல் சாத்துக்குட்டி, கல்யாணி ஆகியோரின் மகனாகப் பிறந்தார். இவர் கண்ணூர் தளிப்பரம்பா பூக்கோத்து தெருவில் பிறந்தார்.
தளிப்பறம்பு உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்றார். கோழிக்கோடு குருவாயூரப்பன் கல்லூரியில் பயின்றார். தில்லி நேசனல் ஸ்கூல் ஆப் டிராமாவில் டிப்ளமோவும் பயின்றார்.
மங்களூர், குடகு, மர்க்காறா தொடங்கி, கேரளம் ஆகிய பகுதிகளில் நாடகத்தில் நடித்தார். . கன்னடத்தில் ஓருகெ மகாசப்ய என்ற திரைப்படத்தில் நடித்தார். பின்னர், சௌக்கட துவீப் என்ற கன்னட திரைப்படத்திலும் நாயகனாக நடித்தார். 1968-ல் வெளியான காயல்க்கரையில் என்ற திரைப்படமே இவரது முதல் மலையாளத் திரைப்படம். ஏறத்தாழ நூறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
