
ராமச்சந்திர பாபு, கேரள மாநில விருதுபெற்ற திரைப்பட ஒளிப்பதிவாளர். இவர் அதிகமாக மலையாளத் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருந்தாலும் தமிழ், இந்தி, அரபி, ஆங்கில மொழித் திரைப்படங்களிலும் பங்காற்றியுள்ளார்.
ராமச்சந்திர பாபு தமிழ்நாட்டின் செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகத்தில் பிறந்தவர். சென்னையின் லயோலா கல்லூரியில் வேதியியல் படித்து இளநிலை பட்டம் பெற்றார். பின்னர் புனேயில் உள்ள இந்தியத் திரைத்துறை நிறுவனத்தில் சேர்ந்து திரைத்துறையில் இளநிலை பட்டம் பெற்றார்.

வித்யார்த்திகளிலே இதே இதே என்னும் திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராகத் திரைத்துறைக்கு அறிமுகமானார். இவரது முதல் வண்ணப்படமான த்வீப் இவருக்கு கேரள மாநில விருதைப் பெற்றுத் தந்தது. ரதிநிர்வேதம், சாமரம், ஒரு வடக்கன் வீரகதா ஆகிய திரைப்படங்களுக்கும் மாநில விருது பெற்றார். பகல் நிலவு உட்பட சில தமிழ்த் திரைப்படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இவர் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய தமிழ் படங்கள்:
அக்ரகாரத்தில் கழுதை, அலாவுதீனும் அற்புதவிளக்கும், ஒரே வானம் ஒரே பூமி
