Saturday, April 18
Shadow

‘யுவன் இஸ் பேக்’ உற்சாகத்தில் யுவன் சங்கர் ராஜ காரணம் என்ன தெரியுமா

பொதுவாக சினிமாவுக்கு வருபவர்கள் எல்லோருக்கும் எல்லா துறையினருக்கும் குறிப்பிட்ட ஓரி சிலருடன் பணிபுரிய ஆசைபடுவார்கள் அந்த வகையில் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு அஜித் படத்தில் மீண்டும் நடிக்க ஆசை அது மீண்டும் நிறைவேறுமா என்று காத்து இருந்தவருக்கு அந்த ஆசை நிறைவேறியிருக்கு

தமிழ் சினிமாவில் உள்ள இளம் இசையமைப்பாளர்களில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கென தனி இடத்தைப் பிடித்திருப்பவர் யுவன்ஷங்கர் ராஜா. கடந்த சில ஆண்டுகளாக அவர் அதிகப் படங்களுக்கு இசையமைக்கவில்லை. அதனால், அவர் இசையமைத்து ஏதாவது ஒரு படம் வெளிவந்தால் உடனே சிலர் ‘யுவன் இஸ் பேக்’ என சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்.

அந்த ‘யுவன் இஸ் பேக் என்பது இப்போதுதான் உண்மையிலேயே பொருத்தமாக அமைந்திருக்கிறது. அஜித் நடிக்கும் ஒரு படத்திற்கு ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு யுவன் இசையமைக்கப் போகிறார்.

‘பின்க்’ பட ரீமேக்கிற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கப் போகிறார் என கடந்த சில வாரங்களாக ஒரு வதந்தி உலவி வந்தது. கடந்த வாரம் அப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பின் யுவன் தான் இசையமைக்கப் போகிறார் என்று தெரிந்ததும் அந்த வதந்தி காணாமல் போய்விட்டது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித் நடிக்கும் ஒரு படத்திற்கு இசையமைக்கப் போவது பற்றி யுவன் ஷங்கர் ராஜா அவருடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். ‘தல 59 படத்தில் பல ஆண்டுளுக்குப் பிறகு இணைவது மகிழ்ச்சி’ என அவர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த டுவிட்டை மட்டும் 61 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளார்கள். 4 ஆயிரம் பேர் கமெண்ட் பதிவிட்டுள்ளார்கள். அஜித் படத்திற்கு யுவன் மீண்டும் இசையமைக்கப் போவது இருவரது ரசிகர்களையும் மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது இதிலிருந்து தெரிகிறது.

அஜித் – யுவன் கூட்டணியில், ‘தீனா, பில்லா, ஏகன், மங்காத்தா, பில்லா 2, ஆரம்பம்’ ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன. ‘ஆரம்பம்’ படத்திற்குப் பிறகு மீண்டும் அஜித், யுவன் கூட்டணி 5 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளது.#yuvan #ak59 #ajith