Monday, April 20
Shadow

கனா- திரைவிமர்சனம் (நம்பிக்கை) Rank 4/5

அறிமுக இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கானா’. இந்தப் படம் பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ளது. கிரிக்கெட் வீராங்கனையாக ஆக விரும்பும் மகளுக்கும், அவரை நிறைவேற்றி இருக்கும் தந்தைக்கும் இடையிலான சம்பவங்கள்தான் படத்தின் கதை.

கனா பட விமர்சனம்:

இந்த படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள அருண் காமராஜ், ஒரே கல்லில் இரண்டு பறவைகளை அடித்துள்ளார். ஒரு கையில் ஸ்போர்ஸ் படம் ஒன்றை இயக்கியதுடன், மறுபுறம், விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து மெசேஜ் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்த படம் பெண்களின் மேம்பாடு குறித்த கருத்துகளையும் உறுதியாக எதிரொலிக்கிறது. மேற்குறிய அனைத்தையும் படத்தில் அமைதியாக ஹேண்டில் செய்துள்ளார் இயக்குனர். இதனால் கனா படம் மாற்ற விளையாட்டு தொடர்பான படங்களில் இருந்து வேறுபட்டு காணப்படுகிறது.

முதல் காட்சி முதலே, இயக்குனர் மேற்குறிய மெசேஜ்களுக்கு சமமான முக்கியத்துவம் அளித்து, கதையை தொடங்குகிறார். இந்த மெசேஜ்கள் இரண்டு இணைந்து கிளைமேக்சில் அழகாக இணைந்து ரசிகர்களுக்கு திறனுடைய பன்ச்-ஐ வெளிபடுத்துகிறது.

இந்த படம் உள்ளூர் கிரிக்கெட் மேட்ச் ஒன்றில் தொடங்குகிறது. தொடர்ந்து, கவுசல்யா அல்லது கவுசி ஐஸ்வர்யா ராஜேஷ்) மற்றும் அவரது தந்தை முருகேஷன் (சத்யராஜ்) குறித்து விளக்கும் கதையுடன் நகர்கிறது.

தந்தையின் இறப்புக்கு கூட அழாமல் கிரிக்கெட்டை ஆர்வமாக பார்க்கும் அளவுக்கு கிரிக்கெட்டின் மீது கவுசி பைத்தியமாக உள்ளார். ஆனாலும் இந்திய கிரிக்கெட் அணி தோல்வியடைந்தால் கண்ணீர் விட்டு அழுவார். தொடர்ந்து தனது தந்தையை மகிழ்விக்கும் நோக்கில் கிரிக்கெட் வீராங்கனையாக முடிவு செய்கிறார். உள்ளூர் கிரிக்கெட் அணியில் இணைந்து பல்வேறு சவால்களை சந்திக்கிறார்.

முதலில் அவரது தாய் இறப்பு, அவருக்கு கிரிக்கெட் பெண்களுக்கான விளையாட்டு ஆள்ள என்பது நம்ப வைக்கிறது. பின்னர், ஆண் கிரிக்கெட் வீரர்களிடம் இருந்து தன்னம்பிகை பெறுகிறார். ஆனாலும் கிராமத்து சுழ்நிலையில் பிறந்ததால், தனது கனவு நிறைவேறுமா என பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

இந்நிலையில், விவசாயியான கவுசியின் தந்தை வறட்சி மற்றும் குறைந்த விளைச்சல் அதனால், வாங்கிய கடனை கட்ட முடியாத நிலை போன்ற பல்வேறு பிரிச்சினைகளை சந்திக்கிறார். இதனால், படம் பார்பவர்கள் இந்த இரண்டு கேரக்டர்களும் ஒரே நேரத்தில் நம்பிக்கை இழந்து விட்டதை உணர்கின்றனர்.ஆனாலும் படம் தொய்வின்றி செல்ல எடிட்டிங் மிகவும் உதவுகிறது.

சில நேரங்களில் குறிப்பாக முரளி (தர்ஷன்) வந்ததும் வரும் காதல் காட்சிகள் சிறப்பாகவே இருக்கின்றன. முரளி கிராமத்தில் டிராவல் கம்பெனி நிறுவனராக நடித்துள்ளார். கிரிக்கெட் கோச்சாக வரும் (சிவகார்த்திகேயன்) காட்சிகள் சாக் தி இந்தியா படத்தில் வரும் காட்சிகள் போன்று இருக்கிறது.

இறுதியில் திரிலிங் கிரிக்கெட் மேட்ச் ஒன்றை அழகாக காட்சி படித்தியுள்ளதுடன், விவசாயிகள் குறித்த பேச்சு ரசிகர்களை வெகுவாக கவர்கிறது.

இந்தப் படத்துக்கு ‘மரகதநாணயம்’ இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். படத்தின் ஆடியோ உரிமையை சோனி கைப்பற்றியுள்ளது. இந்தப் படத்தை நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து கலையரசு என்பவர் தயாரித்து உள்ளார்.

மொத்தத்தில் கனா படம் தன் நம்க்கையின் உதாரணம் என்று சொன்னால் மிகையாகது அதோடு சிறந்த படத்தை தயாரித்த சிவகார்த்திகேயன் குழுவுக்கு பாராட்டுகள் Rank 4/5