கனா படம் நான் தயாரிபதற்கு காரணம் என்ன சிவகார்த்திகேயன் ஓபன் டாக்
நடிகர் சிவகார்த்திகேயன், இப்போது தயாரிப்பாளராகவும் ப்ரமோஷனாகியிருக்கிறார். சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'கனா' படம், இவர் தயாரித்ததுதான். இந்தப் படத்தின் இயக்குநர், இசையமைப்பாளர் என்று பலரும் சிவகார்த்திகேயனுடன் திருச்சி கல்லூரியில் ஒன்றாகப் படித்த நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தனியார் சேனல் ஒன்றுக்கு சிவகார்த்திகேயன் பேட்டியளித்தார். அப்போது 'கனா' படத்தின் இயக்குநர் அருண்ராஜா காமராஜ், கோலமாவு கோகிலா இயக்குநர் நெல்சன் வந்திருந்தனர். அப்போது சிவகார்த்திகேயன் கூறியதாவது:
''கடந்த பத்து வருடங்களாக நெல்சன் சாருடன் பழக்கம் எனக்கு. என்னை, எனக்குள் இருக்கும் திறமையை நன்கு அறிந்து, என்னை உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பார்.
அவர் அப்போதே படம் பண்ணுவதாக இருந்தது. அதற்கான வேலைகளில் ஈடுபட்டபோது, அந்தக் கதை விவாதங்களில் நான் கலந்துகொண்டிருக்கிறேன். சிலந...




