Wednesday, October 28
Shadow

நடிகர் ஆடுகளம் நரேன் பிறந்த தினம் அவரை பற்றிய சில குறிப்புகள்

ஆடுகளம் நரேன் இந்திய திரைப்பட நடிகராவார். இவர் தமிழ் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். 1997ல் ராமன் அப்துல்லா திரைப்படத்தில் அறிமுகமான இவர் 2011ல் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ஆடுகளம் திரைப்படம் மூலமாக புகழ்பெற்றார், அதனால் ஆடுகளம் நரேன் என்று அறியப்படுகிறார். இவர் பாலு மகேந்திராவின் கதை நேரம் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

திருவாரூரை சேர்ந்த இவரது இயற்பெயர் நாராயணன். இராணுவத்தில் பணிபுரிந்த இவரது தந்தை ஒய்வுபெற்ற ராணுவ வீரர். அவரது வேலைக்காக குடும்பம் சென்னை வந்தது. சினிமாவுக்காக நரேன் என பெயர் மாற்றம் பெற்ற இவர், நடிப்பின் மேல் கொண்ட ஆர்வத்தால் நடன இயக்குநர் கலா நடத்தி வந்த நடிப்பு பள்ளியில் பயிற்சி பெற்றார். பிறகு அங்கேயே நடிப்பு சொல்லிக்கொடுக்கும் ஆசிரியராக பணிபுரிந்தார்.

இவர் நடித்த திரைபடங்கள்

ராமன் அப்துல்லா, தாயின் மணிக்கொடி, சூர்ய பார்வை, இன்று, அறை எண் 305ல் கடவுள், அஞ்சாதே, வண்ணத்துப்பூச்சி, ஆடுகளம், யுத்தம் செய், நஞ்சுண்டபுரம் , ஒஸ்தி, நண்பன், மனம் கொத்திப் பறவை, சகுனி, பீட்சா, சுந்தர பாண்டியன், கோழி கூவுது, முகமூடி, உதயம் என்.எச்4, மூன்று பேர் மூன்று காதல், மாசாணி, யமுனா, ஆல் இன் ஆல் அழகு ராஜா, தேசிங்கு ராஜா, ஆரம்பம் , நையாண்டி , ஒரு கன்னியும் மூணு களவாணிகளும், வீரன் முத்துராக்கு, பப்பாளி, இது கதிர்வேலன் காதல், எப்போதும் வென்றான், ஜிகர்தண்டா, சரபம், மேகா, திருடன் போலீஸ், காடு, அழகு குட்டி செல்லம், குகன், ஈர வெயில், கலியுகம், கணிதன், வாலு, யாகாவாராயினும் நா காக்க, பொறியாளன்