Tuesday, April 21
Shadow

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பிறந்த தினம்

ஹாரிஸ் ஜயராஜ் தமிழ் திரைப்படத்துறையில் உள்ள ஓர் இசையமைப்பாளர். பல தமிழ்த் திரைப்படங்களுக்கு பின்னணி இசையும் பாடல்களும் அமைத்துள்ளார். தெலுங்கு, இந்தி திரைப்படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். இவர் சென்னையில் வாழ்ந்து வருகிறார்.

சென்னையின் கிறித்துவ நாடார் குடும்பத்தில் பிறந்தவர் ஹாரிஸ் ஜயராஜ்.[1] அவரது தந்தை எஸ். எம். ஜயராஜ் திரைப்படத்துறையில் கிட்டார் வாசிப்பவராக இருந்து பின்னர் இசையமைப்பாளராக உயர்ந்தவர். மலையாள இசையமைப்பாளர் சியாமிடம் துணைவராகப் பணியாற்றிய அவர், தமது மகனை பெரும் பாடகராகக் காண ஆவல் கொண்டார். ஆனால்,சென்னை கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளியில் பயின்று வந்த ஹாரிசுக்கு இசையமைப்பில் பெரும் ஆர்வம் இருந்தது. தமது குரல் பாடகராக ஒத்துழைக்கவில்லை என்று கூறும் ஹாரிஸ் ஹான்ஸ் சிம்மரின் படைப்புகளில் மனதைப் பறிகொடுத்தார். இவர் ஜாய்ஸ் என்பவரை மணந்தார். இவருக்கு சாமுவேல் நிக்கோலஸ் என்னும் மகனும், கேரன் நிக்கிட்டா என்னும் மகளும் உள்ளனர். இவர் தன்னுடைய 12-ம் வயதியல் (1987)ல் தன்னுடைய இசைப்பயணத்தை ஆரம்பித்தார். கிடார் வாசிப்பாளராக ஆரம்பித்துப் பின்னர் கீ-போர்டு போன்ற இசைக்கருவிகளை வாசிக்கக் கற்றுக்கொண்டார். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் 25-க்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்களோடு பணியாற்றியிருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான், ராஜ்கோட்டி, மணிசர்மா, கார்த்திக் ராஜா, வித்யாசாகர் போன்ற பிரபல இசையமப்பாளர்களோடு பணிபுரிந்துள்ளார்.

இசையமைப்பாளராக 2001 ஆம் ஆண்டு திரைப்படத் துறையில் நுழைந்த ஹாரிஸ் ஜெயராஜ் தன் முதல் படமான ‘மின்னலே’ மூலமே மிகப் பெரிய தடம் பதித்தார்.

2011ம் ஆண்டு ஹாரிஸ் ஆன் தி எட்ஜ் எனும் இசைக் கச்சேரியை நடத்தப்போவதாக அறிவித்தார். அதில் தமிழ் முன்னனிப் பாடகர்களான கார்த்திக், ஹரிசரன், சின்மயி, திப்பு, ஹரிணி, நரேஷ் ஐயர், ஹரீஸ் இராகவேந்திரா, க்ரிஸ், ஆலப்ராஜு, கேகே, பென்னிதயாள், ஆன்ட்ரியா, சுவி சுரேஷ், சுனிதா சாரதி, ஸ்ரீலேகா பார்த்தசாரதி, சுவேதா மேனன் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியை, இயக்குனர் ஏ. எல். விஜய் இயக்கினார்.