
தளபதி 63 ரசிகர்களுக்கு இன்று கொண்டாட்டம் இன்று அடுத்து அடுத்து சுவாரஷ்யமான விஷயங்கள் கசிந்து வருகிறது அந்த வகையில் தற்போது வந்துள்ள செய்தி தளபதி ரசிகர்களுக்கு கொனட்டமான செய்தி
தெறி’, ‘மெர்சல்’ படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். தளபதி 63 என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டு, அந்தப் படத்தை படமாக்கி வருகின்றனர். படத்தில், விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
‘மெர்சல்’, ‘சர்கார்’ படங்களைத் தொடர்ந்து விஜய்யின் இந்தப் படத்துக்கும், ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய், கால்பந்தாட்ட பயிற்சியாளர் கேரக்டரில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. விஜய்க்கு, மைக்கேல் என பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த கேரக்டர் வட சென்னை மீனவ குடும்பத்தின் பின்னணியில் இருந்து வந்தது என்றும் தகவல்கள் கூறுகின்றன. விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் படபிடிப்பு, இன்னும் சில மாதங்களில் முடிவடைந்து, வரும் தீபாவளி நாளில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
