
செக்கச்சிவந்த வானம்’ படத்துக்கு பிறகு அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள க்ரைம் த்ரில்லர் படம் ‘தடம்’. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார்.
இதில் முக்கிய கதாபாத்திரங்களில் தான்யா, ஸ்ம்ருதி, வித்யா பிரதீப், சோனியா அகர்வால், யோகி பாபு நடித்துள்ளனர். ‘ரேதன் – தி சினிமா பீப்பிள்’ நிறுவனம் தயாரித்துள்ள இதற்கு அருண்ராஜ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர்.அப்போது பேசிய அருண் விஜய், “இப்படத்தில் ஒரு லிப் லாக் காட்சி இருந்தது. அதில் நடிக்க முடியாது என நான் கூறிவிட்டேன். ஆனால், இயக்குநர் விடவில்லை. என் மனைவியின் அனுமதி பெற்று அந்தக் காட்சியில் நடித்தேன்” என்றார்.
அருண் விஜய் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே இடையில் பேசிய மகிழ் திருமேனி, “ஆனால் அந்தக் காட்சியில் நடிக்க அருண் விஜய் 13 டேக்குகள் வாங்கினார். அந்தக் காட்சியால் எனக்கு சென்சாரிலும் மிகப் பெரிய பிரச்சினை ஏற்பட்டு விட்டது.
இதனைக் கேட்டு சிரித்த அருண் விஜய், “என் மனைவியும் இந்த விழாவுக்கு வந்திருக்காங்க. குடும்பத்துல குழப்பத்தை உண்டாக்காதீங்க” என ஜாலியாகக் கூறினார். விழாவுக்கு வந்திருந்தவர்கள் அனைவரும் இதைக் கேட்டு சிரித்தனர். இப்படியாக கலகலப்பாக தடம் இசை வெளியீட்டு விழா விழா நடைபெற்றது
