Saturday, April 18
Shadow

இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் நடித்த வர்மா திரைப்படத்தை கைவிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு*

இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் நடித்த வர்மா திரைப்படத்தை கைவிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து E4 எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், எங்கள் நிறுவனம் இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் நடித்த வர்மா திரைப்படத்தை தயாரித்தது வந்தது. இது தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தின் இறுதி வடிவத்தை பார்த்த
போது, நாங்கள் நினைத்து போன்று படம் வரவில்லை என்பதால் படத்தை கைவிடுகிறோம் என்று அறிவித்துள்ளது. மேலும் இந்த படத்தை வேறு மாதிரி வெளியிட முடிவு செய்துள்ளது. இந்த புதிய படத்தில் பணியாற்றும் இயக்குனர் உள்பட பணியாற்றுபவர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியிடப்பட உள்ளது.