Friday, May 1
Shadow

சௌந்தர்யா திருமணத்தில் தனுஷ் மனைவி என்ன செய்துகொண்டு இருந்தார் என்று நீங்களே பாருங்கள்

சவுந்தர்யா ரஜினிகாந்த் நடிகரும்- தொழில் அதிபருமான விசாகன் வணங்காமுடியை நேற்று திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

திருமணம் முன்பு கூறப்பட்டது போன்று எளிமையாக அல்ல பிரமாண்டமாகவே நடந்தது.சவுந்தர்யா கழுத்தில் விசாகன் தாலி கட்டியதை பார்த்து அம்மா லதா ரஜினிகாந்த் கண் கலங்கினார். ஒரு தாயாக அவர் கண் கலங்கியது நியாயம் தான். ரஜினி எமோஷனல் ஆனாலும் அதை காட்டிக் கொள்ளாமல் நின்றிருந்தார்.

லதா மட்டும் அல்ல சவுந்தர்யாவின் அக்காவான ஐஸ்வர்யா தனுஷும் ஆனந்த கண்ணீர்விட்டுள்ளார். இதை பார்த்த தனுஷ் ரசிகர்களோ இந்த தாயுள்ளம் யாருக்கு வரும் என்கிறார்கள். ஐஸ்வர்யா ஆனந்த கண்ணீர் விட்டது மட்டும் இன்றி சவுந்தர்யா தனது மகன் வேத் கிருஷ்ணாவை மடியில் வைத்திருக்கும் புகைப்படமும் பலருக்கும் பிடித்துள்ளது.

சவுந்தர்யா, விசாகனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சவுந்தர்யாவின் மறுமணத்தை பார்த்தால் கணவன் கொடுமையால் விவாகரத்து பெற்ற பெண்களுக்கு நம்பிக்கை பிறக்கிறது என்று சிலர் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.