Wednesday, June 24
Shadow

நயன்தாராவின் ஐரா படத்துக்கு U/A சான்றிதழ் கொடுத்த தணிக்கை குழு

நயன்தாரா நடிப்பில் வெளியாகயிருக்கும் ‘ஐரா’ படத்திற்கு தணிக்கை குழுவினர் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்பட்டு வருபவர் நடிகை நயன்தாரா. இந்தாண்டு தொடக்கத்தில் அஜித்துடன் இணைந்து இவர் நடிப்பில் வெளியான படம் ‘விஸ்வாசம்’. இந்தாண்டில் வெளியான முதல்படமே வசூலில் சாதனை படைத்து வருகிறது.

அடுத்ததாக அவர் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘ஐரா’. இந்தப் படம் மார்ச் மாதம் வெளியாகிறது. இந்த நிலையில் இன்று ‘ஐரா’ படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். அடுத்ததாக படத்தின் புரமோஷன் பணியில் ஈடுபடவுள்ளனர் படக்குழுவினர்.

நடிகை நயன்தாரா முதல்முறையாக ‘ஐரா’ படத்தில் இரு வேடங்களில் நடித்துள்ளார். இந்த படத்தில் கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குனர் சர்ஜூன் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசை அமைத்துள்ளார்.