
அசோக் அமிர்தராஜ், இந்திய அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளரும், முன்னாள் தொழில்முறை டென்னிஸ் விளையாட்டு வீரரும், நேசனல் ஜியாகிரபிக் திரைப்பட நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியும் ஆவார்.
தமிழ்நாடு சென்னையில் பிறந்த அசோக் அமிர்தராஜ் தனது 9 ஆண்டுகால விளையாட்டு வாழ்க்கையில் இந்தியாவிற்காக பல பன்னாட்டு டென்னிஸ் பந்தயங்களில் விளையாடியுள்ளார். விம்பிள்டன், அமெரிக்க ஓப்பன் விளையாட்டுகளில் பற்கேற்று உள்ளார். இவரது சகோதரர்கள் விஜய் அமிர்தராஜ், ஆனந்த் அமிர்தராஜ் ஆகியோரும் டென்னிஸ் வீரர்கள் ஆவர்.
இவர் ஹாலிவுட் உட்பட நூற்றிற்கும் அதிகமான திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். புதியவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் கேட்வே என்ற நிகழ்ச்சியையும் சோனி (Sony PIX) தொலைக்காட்சியில் நடத்தினார். தமிழில் ஜீன்ஸ் என்ற திரைப்படத்தைத் தயாரித்தார்.
இவர் தயாரித்த தமிழ் படம்
ஜீன்ஸ்
