Wednesday, October 28
Shadow

தமிழ் சினிமாவில் மிக பெரிய லாபம் சம்பாதித்த விநியோகிஸ்தர்கள் அஜித்தின் விஸ்வாசம் மூலம்

நடிகர் அஜித்தின் விஸ்வாசம், தமிழ்நாடு பாக்ஸ் ஆபீசில் 75 கோடி ரூபாய் விநியோகஸ்தர் பங்காக பெற்று அதிகளவில் வசூல் செய்த படமாக மாறியுள்ளது. நடிகர் அஜீத் தற்போது ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் “தல 59” பட ஷட்டிங்கில் உள்ளார். இந்த படம் நடிகர் அமிதாப் பச்சன் நடித்த பாலிவுட் படமான “பிங்க்” படத்தின் ரீமேக் என்பது தெரிந்ததே.

வினோத் இயக்கத்தில் உருவாக்கி வரும் “தல 59” படத்தை “தல 60” படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் போனி கபூரே தயாரிக்கிறார். இந்நிலையில், போனி கபூர், எகிப்திய திரைப்படமான ‘Hepta: The Last Lecture’ என்ற படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார் என்றும் இதன் தமிழ் ரீமேக்கில் நடிகர் அஜித்தை முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த படம் ஏழு நிலைகளில் காதல் மற்றும் அமைதியை விளக்கும். இது அஜீத் மற்றும் போனிகபூர் இணையும் மூன்றாவது படம் என்பது கூடுதல் தகவல்.t