அருண் விஜய் தமிழ் சினிமாவில் அஜித்துடன் ஜோடி சேர்ந்த பிறகு ஒரு புது அத்தியாம் எடுத்துள்ளார் என்றால் மிகையாகது என்று சொல்லலாம் ஆம் தொடர்ந்து வெற்றி படங்கள் அதோடு புதுமையான கதை களங்கள் தேர்வு வித்தியாசமான கதாபாத்திரங்கள் என்று ஜொலித்து வருகிறார் . இதை இவரின் நாளை வெளிவர இருக்கும் தடம் படத்திலும் செய்துள்ளார்.

அருண் விஜய் மற்றும் மகிழ் திருமேனி இணைந்து அதிரடி ஆக்ஷ்ன் கொண்ட திரில்லர் படமான “தடையற தாக்க” படத்தை வெளியிட்டனர். மீண்டும் இதே போன்ற கொலை மற்றும் சைக்கோ டூவிஸ்ட்குடன் கூடிய மாறுபட்ட திரைபடம் ஒன்றை தமிழ் சினிமாவுக்கு அளித்துள்ளனர். இந்த கூட்டணிக்கு வலுவான ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் மகிழ் திருமேனியுடன் இணையும் இரண்டாவது படம் தடம் இந்த படமும் வெற்றி படம் என்பதில் சிறிதும் ஐயமில்லை காரணம் கதை களமும் கதாபாத்திரங்களும் மிக சிறப்பாக அமைந்துள்ளது அதே போல இயக்குனர் அருண் விஜய் திறமை அறிந்து கதையும் திரைகதை அமைத்து இருப்பது அருமை படத்தின் நாயகன் அருண் விஜயா இல்லை இயக்குனரா என்று சொல்லும் அளவுக்கு படம் அமைந்து இருப்பது மேலும் சிறப்பு

எழில் (அருண் விஜய்) கட்டுமான தொழில் செய்யும் பிசினஸ்மேன், இவர் தனது கட்டிடத்தில் வேலை பார்த்து வரும் தீபிகா (தானியா ஹோப்) என்ற பெண்ணை லவ் செய்கிறார்.

இவரை போலவே உள்ளவர் கவின் (அருண் விஜய் இரட்டை வேடத்தில்), காரணி சுருணி (யோகி பாபு) உடன் இணைந்து திருட்டு, கேம்பிங் போன்ற செயல்களை ஈடுபட்டு அதிவேக பணம் சேர்த்து வருகிறார். அப்பாவியான ஆனந்தி (மீரா) கவின்-ஐ லவ் செய்கிறார். இவரது அப்பாவி தனத்தை பயண்படுத்தி, தனது பணம் சேர்க்கும் பணிகளில் ஆனந்தியை கவின் பயன்படுத்தி வருகிறார்.

இளைஞர் ஆகாஷ், இரண்டு பேரால் கொலை செய்யப்படுகிறார். அதில் ஒருவர் இன்ஸ்பெக்டர் விஜயன் (FEFSI) இவர், எந்த விசாரணையும் இன்றி எழிலை திட்டமிட்டு இந்த கொலையில் சிக்க வைத்து சிறையில் அடைகிறார். இந்நிலையில் கவினும் சிறைக்கு வருவது இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் (விஜய் பிரதீப்) இருவருக்கும் பெரிய தலைவலியாக அமைகிறது. இந்நிலையில், எலி மற்றும் பூனை விளையாட்டு தொடங்குகிறது. இதில் போலீசார் குழப்பம் அடைந்து யார் கொலையாளி என்பதை தெரிவிப்பதே இந்த படத்தின் எதிர்பாராத கிளைமேக்ஸ்.

அருண் விஜய் இரட்டை வேடங்களில் கவின் மற்றும் எழில் என நடித்துள்ளனர். இரட்டை வேடத்தில் யார் எவர் என்பது அவர்களது மேனரிசத்தால் மட்டுமே கண்டிபிடிக்க முடிகிறது ஆக்ஷன் காட்சிகளில் அருண் விஜய் சிறப்பாக நடித்துள்ளனர். இந்த காட்சிகள் மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றும் வகையில் அமைந்துள்ளது.

இரண்டு அருண் விஜய் செய்யும் காதல் காட்சிகள் அழகாக படமாகப்பட்டுள்ளது. புதிய வரவாக வந்துள்ள தானியா ஹோப் மற்றும் மீரா இருவரும் சில காட்சிகளில் ஸ்கிரீனை ஆக்கிரமிக்கின்றனர். விஜய் பிரதீப்பின் கேரக்டர், நேர்மையான சப் இன்ஸ்பெக்டர் ஆகியோர் தங்கள் பங்குக்கு சிறப்பாக நடித்துள்ளனர். சோனியா அகர்வால், யோகி பாபு (சீரியான காட்சிகளில்) FEFSI விஜயன், ஜார்ஜ் மற்றும் மீரா கிருஷ்ணன் போன்றவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளனர்.

படத்தில் கமர்சியல் காட்சிகளாக, இடம் பெற்றுள்ள பாடல்கள், டூயட், போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் அதிகளவிலான ஹீரோயிசாம் போன்றவை மற்ற படங்களில் இருந்து இந்த படத்தை வேறுபடுத்தி காட்டுகிறது. படத்தின் முதல் பாதி காட்சிகளை தாண்டி, உண்மையான கதை நீண்ட நேரத்திற்கு பின்னரே தொடங்குகிறது. பெப்சி விஜயனின் பழி வாங்கும் படலம் தொடங்கியதும், அருண் விஜய் மற்றும் தானியா வின் விதியே மாறுகிறது. விஜய் பிரதீப் சைக்கோவும், அந்த கேரக்டருக்கு அவருக்கு கொடுக்கப்பட்ட பில்ட்அப்கள் பொருந்தவில்லை.

அருண்ராஜ்ஜின் பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் வகையில் இல்லை. பேக்கிரவுண்ட் ஸ்கோர்கள் படத்தில் சிங்க் ஆகியுள்ளது. சக்தி சரவணன் இந்த படத்திற்கு டார்க் ஷேடுகளை அளிக்க முயற்சித்து, பல இடங்களில் தனது எடிட்டிங் பணிகளால் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். மகிழ் திருமேனி தேர்வு செய்துள்ள சஸ்பென்ஸ் நாவலை உயிருடன் கொடுக்க மேற்கொண்ட முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார்.

மொத்தத்தில் கொலை, சஸ்பென்ஸ், சைக்கோ கதையை பார்க்க செல்பவர்களுக்கு இது, இதேபோன்ற மற்ற படங்களில் இருந்து வேறுபட்ட படமாக இருக்கும்.

மொத்தத்தில் தடம் ரசிகர்களின் புதுமையான பதம் Rank 4/5

Related