Monday, April 20
Shadow

ஹாலிவுட் நடிகர் டேனியல் கிரெய்க் பிறந்த தினம்

டேனியல் ரவுட்டன் கிரெய்க் (Daniel Craig) என்பவர் ஒரு ஆங்கில திரைப்பட நடிகர் ஆவார். இவர் ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட தொடரில் ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்தில் நடித்ததற்காக உலகப் புகழ் பெற்றவர்.

இங்கிலாந்தை சேர்ந்த டேனியல் கிரெய்க் தான் தற்போதைய ஜேம்ஸ் பாண்ட். 25வது ஜேம்ஸ் பாண்ட் படத்தை எடுக்கிறார்கள். அந்த படத்தில் டேனியல் கிரெய்க் நடிக்கிறார்.

அவர் ஜேம்ஸ் பாண்டாக நடிக்கும் கடைசி படம் இது தான்.

டேனியல் கிரெய்க் கடைசியாக ஜேம்ஸ் பாண்டாக நடிக்கும் படத்திற்கு அவருக்கு ரூ. 448 கோடி சம்பளம் கொடுக்கப்படுகிறதாம். முன்னதாக அவர் நடித்த ஸ்பெக்டர் படத்திற்கு ரூ. 331 கோடி சம்பளம் வாங்கினார்.

இனியும் ஜேம்ஸ் பாண்டாக நடிப்பதற்கு பதில் நான் என் கை நரம்பை அறுத்துக் கொள்வேன் என்று கடந்த 2015ம் ஆண்டு டேனியல் கிரெய்க் தெரவித்தார். இந்நிலையில் அவர் மீண்டும் ஜேம்ஸ் பாண்டாக நடிக்கிறார்.

டேனியல் கிரெய்க் நடிக்கும் புதிய படத்தை ஆஸ்கர் விருது பெற்ற டேனி பாய்ல் இயக்குகிறார். படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்கி 5 மாதங்கள் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேம்ஸ் பாண்டாக நடித்தவர்களிலேயே அதிக சம்பளம் வாங்குபவர் டேனியல் கிரெய்க் தான். டேனியல் கிரெய்க் நடித்த ஜேம்ஸ் பாண்ட் படங்கள் சூப்பர் ஹிட்டாவதால் அவருக்கு பெரும் தொகையை சம்பளமாக கொடுப்பதில் தவறு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.