Monday, April 20
Shadow

தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அல்லிராஜா பிறந்த தினம்

இலங்கை தமிழர் சுபாஸ்கரன் அல்லிராஜா என்பவர் இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர், லைக்கா மொபைல் குழும நிறுவனங்களின் தலைவர் ஆவார். இவரது லைக்கா மொபைல் நிறுவனமானது தற்போது 17 நாடுகளில், சுமார் 12 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு தனது தொலைத் தொடர்பு சேவையை வழங்கி வருகிறது. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயற்பட்டுவரும் லைக்கா புரொடக்சன் நிறுவனம் இவருக்கு சொந்தமான திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகும்.

லண்டன் தொழில் அதிபர்களில் மிக முக்கிய பொறுப்பு வகிக்கிறார். தமிழ் சினிமாவில் இன்று முக்கிய தயாரிப்பாளர் பல முன்னணி நடிகர்களை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்.

இவர் 2006ம் ஆண்டில் லைகா மொபைல் நிறுவனத்தை பிரிட்டன் நிறுவனத்துடன் னியானியாது 18 நாடுகளில் தொடங்கினார். இந்த மொபைல் சேவையை 20 மில்லியன் பயனாளர்கள் பயன்படுத்தினர்.

பின்னர் லைகா நிறுவனத்தை கடந்த 2014ஆம் ஆண்டில் சென்னையில் தொடங்கினார். லைக்கா மொபைல் நிறுவனத்தின் துணை நிறுவனமான இது திரைப்படங்களை தயாரிப்பது, மற்றும் பகிர்ந்தளிக்கும் பணிகளை செய்கிறது. 2014ஆம் ஆண்டில் வெளியான கத்தி திரைப்படம் இந்நிறுவனம் தயாரித்த முதல் திரைப்படமாகும்.

2008ஆம் ஆண்டில் வெளியான பிரிவோம் சந்திப்போம் திரைப்படத்தினை ஞானம் பிலிம்சு என்ற பெயரில் சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அய்ங்கரன் இன்டர்நேசனல் நிறுவனத்துடன் இணைந்து இவரது லைக்கா புரொடக்சன்சு நிறுவனம் விஜய், சமந்தா ருத் பிரபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த கத்தி திரைப்படத்தினை தயாரித்தது. இந்நிறுவனம் தற்போது, 2010ஆம் ஆண்டில் வெளியான எந்திரன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளிவரும், சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்சய் குமார், ஏமி ஜாக்சன் ஆகியோர் நடிக்கும் எந்திரன் 2 திரைப்படத்தினை தயாரித்து வருகிறது.

பிரபல திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் கஜா புயலால் பாதிகப்பட்ட டெல்டா மாவட்ட மக்களின் நிவாரணப் பணிக்காக ஒரு கோடியே ஒரு லட்ச ரூபாய் நிதி அளித்துள்ளது. இலங்கை வவுனியாவில் ஈழத் தமிழர்களுக்கு இலவசமாக 150 வீடுகளை ‘லைகா’ நிறுவனம் வழங்கியுள்ளது.

இந்த நிறுவனம் தயாரித்த திரைப்படங்கள்

கத்தி, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, எமன், இப்படை வெல்லும், தியா, கோலமாவு கோகிலா, செக்க சிவந்த வானம், வட சென்னை, 2.0, வந்த ராஜாவா தான் வருவேன், இம்சை அரசன் 24வது புலிகேசி, இந்தியன் 2

இந்த நிறுவனம் பகிர்ந்தளித்த திரைப்படங்கள்

நானும் ரவுடி தான், விசாரணை , தாரை தப்பட்டை, அச்சம் என்பது மடமையடா