Sunday, June 28
Shadow

நடிகர் சங்க தலைவர் நடிகர் நாசர் பிறந்த தினம்

நாசர், புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் அண்மைய ஆண்டுகளில் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். திரைக்கதை, வசனம், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் பணியாற்றி உள்ளார். நாசர், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நாசர் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.

தமிழ்நாட்டில் செங்கல்பட்டு என்னும் ஊரில் எளிமையான குடும்பத்தில் பிறந்த நாசர், செங்கல்பட்டிலுள்ள புனித யோசப் உயர்நிலைப்பள்ளியில் படித்தவர். பல்கலைக்கழக நுழைவுக்கல்வி (P.U.C.)யை பாதியிலேயே விட்டுவிட்டு கலைத்துறை ஆர்வத்தில் சென்னைக்குக் குடிபுகுந்தார். சென்னை கிருத்துவக் கல்லூரியில் இளங்கலை தாவரவியல் பட்டப்படிப்பு படித்தார். இவர் இந்திய விமான படையில் சிறிது காலம் பணியாற்றினார்.

தமது நாடக பட்டறிவை முன்வைத்து திரையுலகில் கால் பதிக்க முயன்றவர். வறுமை தாங்காது தாஜ் கோரமண்டல் விடுதியின் சேவைப்பகுதியில் சேர்ந்து பணியாற்றியிருக்கிறார். திரைத்துறைக்கு முயன்ற அதே நேரம் கதை, கவிதைகள் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பி வந்தார். அவற்றில் சில பிரசுரமானது.

சென்னை திரைப்படக் கல்லூரியில் பயின்று நடிப்புத்துறையில் பட்டயம் பெற்றார். இதன் முன்னர், தென்னிந்திய திரைப்பட சங்கத்தின் நடிப்புப் பயிற்சி மையத்திலும் பயிற்சி பெற்றார். இவரது ஆர்வத்தினால் இயக்குனர் கே. பாலசந்தர் கல்யாண அகதிகள் என்ற படத்தில் வாய்ப்பளித்தார். அன்று துவங்கி 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சித் தொடரிலும் நடித்துள்ளார்.

மகேந்திரனின் தொலைக்காட்சிப் படம் காட்டுப்பூக்கள் மற்றும் சேனாதிபதி இயக்கிய பனகாடு இவரது நடிப்புத்திறனை உலகிற்கு பறை சாற்றியது. 1995இல் அவதாரம் என்ற திரைப்படத்தை தாமே இயக்கி நடித்தார். தேவதை என்ற படத்தை 1997இல் இயக்கி நடித்தார்.

அவரது தெலுங்கு திரைப்படம் சண்டியில் நடிப்பிற்காக நந்தி விருது பெற்றார்.

இவர் நடித்த படங்கள்

இருபத்தியாறு 26, சில சமயங்களில், பார்ட்டி, குற்றம் நடந்தது என்ன, சதுரங்க வேட்டை 2, அழியாத கோலங்கள், கருடா, அக்னி சிறகுகள், 100% காதல், சயீரா நரசிம்ம ரெட்டி, மருதநாயகம், வந்தா ராஜாவாதான் வருவேன், விஸ்வரூபம் 2, கேணி, ஓடு ராஜா ஓடு, நோட்டா, செய், சோலோ, வைகை எக்ஸ்பிரஸ், பாகுபலி 2, மகளிர் மட்டும், திட்டி வாசல், வல்லதேசம், 8 தோட்டாக்கள், காஸி, 7 நாட்கள், சாகசம், கதகளி, ஆண்டவன் கட்டளை, இறுதி சுற்று, ஜில் ஜங் ஜக், குற்றமே தண்டனை, நமது, கபாலி, இரு முகன், சவாலே சமாளி, பாகுபலி, யாகவராயினும் நாகாக்க, உத்தம வில்லன், ஆவிக்குமார், சைவம், ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, வீரம், நிமிர்ந்து நில், அப்புச்சி கிராமம், காவியத்தலைவன், யான், விஸ்வரூபம், கோச்சடையான், பிரியாணி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, வணக்கம் சென்னை, தலைவா, சிங்கம் 2, நேரம், சேட்டை, தாண்டவம், முகமூடி, சகுனி, தோனி, முப்பொழுதும் உன் கற்பனைகள், வேட்டை , ஒஸ்தி, தெய்வத்திருமகள், நந்தலாலா, மதராசப்பட்டினம், சிங்கம், திண்டுக்கல் சாரதி, குருவி , வேல், மருதமலை, ஆதி, அன்பே சிவம், படையப்பா, மகளிர் மட்டும், தேவர் மகன், மைக்கேல் மதன காமராஜன்