Sunday, June 28
Shadow

இயக்குனர் செல்வராகவன் பிறந்த தினம்

செல்வராகவன் இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். ஆரம்பத்தில் தன் தந்தையின் இயக்கமான துள்ளுவதோ இளமை படத்தில் வசன எழுத்தாளராக இருந்தார். பின்பு காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பிறகே 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன் மற்றும் இரண்டாம் உலகம் போன்ற திரைப்படங்களை இயற்றினார்.

செல்வராகவன் இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகனும், நடிகர் தனுஷின் அண்ணனும் ஆவார். இவர் நடிகை சோனியா அகர்வாலை 2006-ம் ஆண்டு திருமணம் செய்து 2009-ம் ஆண்டு விவாகரத்து செய்தார். பின்பு கிதாஞ்சலி ராமன் என்பவரை மணந்து கொண்டார்.

இவர் இயக்கிய படங்கள்

கான், மன்னவன் வந்தானடி, NGK, நெஞ்சம் மறப்பதில்லை, இரண்டாம் உலகம், மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை, காதல் கொண்டேன், துள்ளுவதோ இளமை

இவர் பாடல் எழுதிய திரைப்படம்

துள்ளுவதோ இளமை