
கே. சங்கர் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்படத் தொகுப்பாளர் ஆவார். 1926 மார்ச்சு 17 அன்று மலபாரில் (தற்போதைய கேரளம்) பிறந்த இவர் 80க்கும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இந்தியாவின் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம் தயாரிப்பகத்தில் படத்தொகுப்பாளராக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய சங்கர், பின்னர் திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார். இவர் இயக்கிய முதல் திரைப்படம் டாக்டர் என்னும் சிங்கள மொழித் திரைப்படமாகும்.[2] இவர், எம். ஜி. இராமச்சந்திரன் நடித்த குடியிருந்த கோயில், அடிமைப் பெண், என். டி. ராமராவ் நடித்த பூகைலாஷ், ஜெயலலிதா நடித்த கௌரி கல்யாணம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியதன் மூலமாக தென்னிந்தியாவின் மூன்று முதல்வர்கள் நடித்த திரைப்படங்களை இயக்கியவர் என்ற பெருமை பெற்றவர்.
பல வெற்றித் திரைப்படங்களை இயக்கிய பின்னர் தாய் மூகாம்பிகை, வருவான் வடிவேலன் உள்ளிட்ட பக்தித் திரைப்படங்களை இயக்கினார்.[3] இவர், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் தமிழ்நாடு அரசின் ராஜா சாண்டோ விருதினைப் பெற்றுள்ளார்.
தனது மனைவி மற்றும் 8 குழந்தைகளுடன் வசித்து வந்த சங்கர், மாரடைப்பின் காரணமாக 2006 மார்ச் 5 அன்று இரவு 7 மணியளவில் தனது 80 ஆவது அகவையில் காலமானார்.
இவர் இயக்கிய தமிழ் திரைப்படம்
நாகதேவதை, சிவகங்கை சீமை, கவலை இல்லாத மனிதன், கைராசி, பாத காணிக்கை, ஆலயமணி, ஆடிப்பெருக்கு, ஏழை பான்காளன், ஆலய மணி, பணத்தோட்டம், இது சத்தியம், ஆண்டவன் கட்டளை, வீரக்கனல், பஞ்சவர்ணக் கிளி, கலங்கரை விளக்கம், அன்புக்கரங்கள், சந்திரோதயம், கௌரி கல்யாணம், குடியிருந்த கோயில்
