Sunday, June 28
Shadow

ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன் பிறந்த தினம்

ரவி கே. சந்திரன் ஓர் இந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளரும், திரைப்பட இயக்குனரும் ஆவார். இவர், பிரியதர்சன், மணிரத்னம், ராஜீவ் மேனன், சஞ்சய் லீலா பன்சாலி, ஏ. ஆர். முருகதாஸ் உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி இயக்குனர்கள் பலருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். சிறந்த ஒளிப்பதிவுக்காக, இரண்டு முறை பிலிம்பேர் விருதையும், ஒருமுறை தென்னிந்திய பிலிம்பேர் விருதையும் பெற்றுள்ளார். ஜீவா, துளசி நாயர் நடித்த யான் திரைப்படத்தை இயக்கியவர் ஆவார்.

ரவி கே. சந்திரன், தமிழ்த் திரைப்படத்துறையின் குறிப்பிடத்தக்க ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான ராமச்சந்திர பாபுவின் இளைய சகோதரர் ஆவார். ஹேமலதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது தனது இரு மகன்களுடன் சென்னையில் வசித்து வருகிறார்.

இவர் இயக்கிய திரைப்படங்கள்

யான்

இவர் ஒளிப்பதிவு செய்த படங்கள்

ஆனஸ்ட் ராஜ், மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சிட்டிசன், கன்னத்தில் முத்தமிட்டால், பாய்ஸ், ஆய்த எழுத்து, ஏழாம் அறிவு