Sunday, June 28
Shadow

நடிகர் கலாபவன் மணி மறைந்த தினம்

கலாபவன் மணி தென்னிந்தியத் திரைப்பட நடிகனும் பாடகரும் ஆவார். இவர் மலையாளத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினாலும், தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மலையாளத் திரைப்படங்களில் நாயகனாகவும், தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் எதிர்நாயகனாகவும் நடித்துள்ளார். தேசிய விருதையும், கேரள மாநில சிறந்த நடிகருக்கான விருதினையும் வென்றவர்.

இவர் நாட்டுப்புற பாடல்களையும் பாடியுள்ளார். திருச்சூர் மாவட்டத்தின் சாலக்குடியில் பிறந்தவர். மலையாள திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்பு மூவிருளி ஓட்டுநராகவும் பணியாற்றியுள்ளார். வசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும் என்ற திரைப்படத்தில் நடித்ததிற்காக 2000ஆம் ஆண்டில் கேரள அரசின் திரைப்பட விருதை பெற்றுள்ளார்.

ஈரல் மற்றும் சிறுநீரக கோளாறு காரணமாக 2 நாட்களாக கொச்சியில் உள்ள அம்ருதா என்ற தனியார் மருத்துவமனையில் சிகிட்சை பெற்ற வந்த கலாபவன் மணி மார்ச்சு 6 அன்று இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தார்கள்.

இவர் நடித்த படங்கள்

கலைவேந்தன், கங்காரு, பாபநாசம், மோதி விளையாடு, வேல், சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், ஆறு, மழை, அந்நியன், புதிய கீதை, ஜெமினி