Wednesday, October 28
Shadow

என்னது சிம்பு இவருக்கு வில்லானாகவா நடிக்கிறார்

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து பின்னர் மிக பெரிய ஹீரோவாக வலம் வருபவர் சிம்பு இதுவரை ஹீரோ மட்டும் என்று இருந்த சிம்பு நட்புக்கு தோள் கொடுக்கும் வகையில் வில்லனாக களம் இறங்குகிறார்.
இந்த இருபடங்களைத் தொடர்ந்து ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்க உள்ள படத்திலும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கன்னட மொழியில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடித்து வெற்றிபெற்ற ‘மப்டி’ படத்தின் தமிழ் ரீமேக்காக இந்தப் படம் உருவாக உள்ளது. படத்தில் நாயகனாக ஆர்யா நடிக்க அவருக்கு வில்லனாக சிம்பு நடிக்க இருக்கிறார். படத்தின் முக்கியமான கதாபாத்திரமொன்றில் சரத்குமார் நடிக்க உள்ளார்.முன்னதாக விஜய்சேதுபதி மற்ற நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து வந்த நிலையில் தற்போது சிம்புவும் வில்லன் அவதாரம் எடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.