Saturday, April 18
Shadow

சம்பளத்தை விட்டு கொடுத்த விஷால் அயோக்யா இன்று ரிலீஸ்

பொதுவாக ஒரு படத்துக்கு எந்த வித பிரச்சனை வந்தாலும் அதை தயாரிப்பளர் சங்கம் தான் தீர்த்து வைக்கும் அதுக்கு முன்னையாக இருந்து நடிகர் விஷால் குழு தலைமையில் தீர்வு ஏற்படும் ஆனால் சமீபகாலமாக அவர் படத்துக்கு ரிலீஸ் பிரச்சனை நேற்று வெளியாக இருந்த அயோக்யா படத்துக்கு பண நெருக்கடியால் நேற்று வெளியாகவில்லை . காரணம் சம்பள பாக்கி. தலைவருக்கே வந்த சத்ய சோதனை

 

விஷால் நாயகனாக நடித்துள்ள அயோக்யா படம் இன்று(மே 10, வெள்ளிக்கிழமை) வெளியாக வேண்டிய சூழலில் கடைசி நேர நிதிப் பிரச்சினையால் வெளியாகாமல் போனது. தயாரிப்பாளர்கள் சங்க தலைவரான விஷால் படத்திற்கே இப்படி ஒரு நிலைமையா என கோலிவுட்டில் பேச ஆரம்பித்தனர்.

இதனிடையே, படத்தின் உள்ள சிக்கல்களைத் தீர்த்து படத்தை இன்று வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்த விஷால், மேலும் சில கோடிகளை விட்டுக் கொடுப்பதாகச் சொன்னாராம்.

அவருடைய சம்பளத்தில் இருந்து மேலும் 1 கோடியைக் குறைத்துக் கொண்டுள்ளாராம். அதோடு, அயோக்யா படத்தை டப்பிங் செய்து வெளியிடக் கூடாது என்று முதலில் சொன்னதை மாற்றிக் கொண்டு இப்போது டப்பிங் செய்யலாம் என்றும் சொல்லிவிட்டாராம். அதன் வழியில் வரும் 2 கோடி ரூபாயையும் தயாரிப்பாளரே எடுத்துக் கொள்ளட்டும் என்று கூறிவிட்டாராம். மொத்தமாக விஷால் 3 கோடி வரை விட்டுக் கொடுத்து விடுகிறேன். இதற்கு மேலும் கேட்காதீர்கள், படம் வெளியாகட்டும் என்று சொல்லிவிட்டு படப்பிடிப்புக்குச் சென்று விட்டாராம்.

இந்நிலையில், பைனான்சியர் வீட்டில் இரவு 8 மணி வரை நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இதனையடுத்து தமிழகம்  முழுவதும் இன்று திரைப்படம் வெளியாக உள்ளது.