Wednesday, October 28
Shadow

கணவருடன் இணைந்து நடிப்பது பற்றி பிரபல இசையமைப்பாளரின் மனைவி பதில்

நடிகர்கள் தங்கள் மனையுடன் இணைந்து படத்தில் நடித்து வருவது பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், சினிமாவில் பாடல்கள் பாடி வரும் பாடகி சைந்தவியின் நீங்கள் உங்கள் கணவருடன் நடிப்பீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் எனது கணவர் நடிப்பு, இசை என நிற்கமுடியாமல் ஓடி கொண்டிருப்பத்தை நேரடியாக பார்க்கிறேன். இதே போன்று என்னால் நடிக்க முடியுமா என்பது சந்தேகம் தான். இப்படியிருக்கும் போது, எப்படி அவருடன் இணைந்து நடிப்பது? அவருடன் இணைந்து நடிப்பதற்கு சாத்தியமே இல்லை என்றார்.

இவர் கடந்த 2013ம் ஆண்டில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாசை காதல் திருமணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.