Saturday, April 18
Shadow

ஹாலிவுட் நடிகர் புரூசு லீ மறைந்த தின பதிவு

லீ ஜூன் ஃபேன் புரூஸ் இவரின் திரைப்படப் பெயரான புரூஸ் லீ என பரவலாக அறியப்படும் ஆங்காங் மற்றும் அமெரிக்கத் திரைப்பட நடிகர், இயக்குநர் (திரைப்படம்), தற்காப்புக் கலைஞர், தற்காப்புக் கலைகள் பயிற்றுநர், மெய்யியலாளர், ஜீத் குன் தோ எனும் உஷூ அல்லது சீன சண்டைக் கலையைத் தோற்றுவித்தவரும் ஆவார். இவரின் பெற்றோர் கன்தோனிஸ் ஆபரா , லீ ஹோய் சுன். இவர் ஊடகவியலாளார்கள், விளக்கவுரையாளர்கள், விமர்சகர்கள், மற்றும் தற்காப்புக் கலைஞர்களால் அனைத்துக் கால தற்காப்புக் கலைகளில் சக்திவாய்ந்த ஆளுமையாகப் பார்க்கப்படுகிறார். 20-ஆம் நூற்றாண்டின் பரப்பிசை பண்பாடு கால குறி உருவமாகப் பார்க்கப்பட்டார்.

புரூச் லீ சான் பிரான்சிஸ்கோ, சைனா டவுனில் நவம்பர் 27, 1940 இல் பிறந்தார். இவர்களின் பெற்றோர் ஆங்காங்கில் பிறந்து கவுலூனில் குடியேறினர். இவரின் தந்தையால் இவர் திரைஉலகத்திற்கு அறிமுகம் ஆனார். சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தனது 18 ஆவது வயதில் மேற்படிப்பிற்காக அமெரிக்க ஐக்கிய நாடு சென்றார். சியாட்டில், வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றார். அங்கு பயின்ற சமயத்தில் தற்காப்புக் கலைகளை பயிற்றுவித்தார். இவரின் ஆங்காங் மற்றும் ஹாலிவுட் திரைப்படங்கள் ஆங்காங்கின் பாரம்பரிய தற்காப்புக் கலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இந்தப் புதுமையான வடிவத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.1970 களில் சீன சண்டைக் கலைகள் பற்றிய தாக்கம் அதிகரித்தது. இவரின் புதுவகையான இயக்கும் பாணியானது அமெரிக்க ஐக்கிய நாடு, ஆங்காங் மற்றும் உலகின் பிற பகுதிகளிலும் தற்காப்புக் கலைகள் மற்றும் தற்காப்புக் கலைகள் பற்றிய திரைப்படங்களின் தாக்கத்தில் மாற்றம் ஏற்படச் செய்தது.

இவர் 1971 இல் லோ வீ இயக்கிய த பிக் பாஸ், 1972 இல் ஃபிஸ்ட் ஆஃப் ஃபியூரி, கோல்டன் ஹார்வஸ்ட் இயக்கிய ராப்ர்ட் கிளவுஸ் இயக்கத்தில் வே ஆஃப் தெ டிராகன், 1978 இல் தெ கேம் ஆஃப் தெ டெத் போன்ற திரைப்படங்களின் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படுகிறார். இவர் உலக அளவில் குறிவுருவமாக பார்க்கப்பட்டார், குறிப்பாக இவரின் திரைப்படங்களில் சீன தேசியக் கருத்துகள் அதிகம் இருந்ததனால் சீனர்களால் குறிவுருவமாகப் பார்க்கப்படுகிறார். இவர் துவக்கத்தில் விங் சுன் எனும் சீன சண்டைக் கலைகளில் பயிற்சி எடுத்தார். இவர் ஆங்காங் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ளார். புரூஸ் லீ ஆங்காங்கிலுள்ள கௌலூன் டாங்கில் தனது 32 ஆம் வயதில் சூலை 20, 1973 இல் மரணமடைந்தார்.