Tuesday, April 28
Shadow

பிகில் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் உள்ள விருது வென்ற இசையமைப்பாளர்

சர்கார் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் மீண்டும் அட்லீயின் இயக்கத்தில் மூன்றாவது முறையாக பிகில் படத்தில் இணைந்துள்ளார்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மெர்சல், சர்கார் படங்களை தொடர்ந்து பிகில் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். முதல் முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் விஜய் ‘பிகில்’ படத்தில் ‘வெறித்தனம்’ என்ற பாடலை பாடியுள்ளார்.

சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சிங்கப்பெண்ணே பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் இறுதிகட்ட பணிகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. விஜய் ரசிகர்கள் மத்தியில் பிகில் திரைப்படத்தை கதை என்னவாக இருக்கும் என பேச்சு அதிகமாக இருந்து வருகிறது. ஏற்கனவே வெளியான போஸ்டர்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் இந்த திரைப்படம் ஒரு பெண்களுக்கான புட்பால் போட்டி குறித்து எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதும், அதில் விஜய் பயிற்சியாளராக வருகிறார் என்பதும் வந்துவிட்டது.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதியோட முடியும் என தகவல் வெளியாகிருக்கு. மேலும் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவை வரும் செப்டம்பர் மாதம் கடைசி வாரம் நடத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது