Friday, April 17
Shadow

Tag: உள்ள

ஜப்பானிலும் சிகாகோவிலும் திரையிடப்பட உள்ள ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’

Latest News, Top Highlights
இயக்குனர் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” திரைப்படம் மும்பை திரைப்பட விழாவில் சமத்துவ பாலின விருது பெற்றதுடன், சர்வதேச பெங்களூர் திரைப்பட விழாவில் வெளியாகி ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு விருது அளிக்கபட்டுள்ளது. அட்லாண்டா உலக திரைப்படவிழாவில் CLOSING FILM ஆக திரையிடப்பட்டு கவுரவிக்கப்பட்டது. 23வது கேரள சர்வதேச திரைப்படவிழா, பூனே சர்வதேச திரைப்படவிழா, சர்வதேச ஸ்வீடன் நாட்டு திரைப்படவிழா, திபுரான் உலக திரைப்படவிழா, அட்லாண்டா திரைப்படவிழா, அமெரிக்காவில் நடைபெற்ற நியுயார்க் மற்றும் கலிபோர்னியா திரைப்படவிழாக்கள், யுரேஷியாவில் நடைபெற்ற உலக திரைப்பட விழா என இன்னும் பல சர்வதேச திரைப்படவிழாவிலும் தேர்வு செய்யபட்டு உலக திரைப்பட விழாக்களில் "சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்" திரைப்படத்தை கொண்டாடுகிறார்கள், தற்போது ஜப்பானில் நடைபெறும் மாபெறும் ஃபுக்குவாக்கா உலக தி...

பிகில் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் உள்ள விருது வென்ற இசையமைப்பாளர்

Latest News, Top Highlights
சர்கார் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் மீண்டும் அட்லீயின் இயக்கத்தில் மூன்றாவது முறையாக பிகில் படத்தில் இணைந்துள்ளார். அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மெர்சல், சர்கார் படங்களை தொடர்ந்து பிகில் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். முதல் முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் விஜய் ‘பிகில்’ படத்தில் ‘வெறித்தனம்’ என்ற பாடலை பாடியுள்ளார். சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சிங்கப்பெண்ணே பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் இறுதிகட்ட பணிகளில் படக்க...
சீனாவில் வெளியாக உள்ள சூப்பர்ஸ்டார் படம்

சீனாவில் வெளியாக உள்ள சூப்பர்ஸ்டார் படம்

Latest News, Top Highlights
சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாக்கியுள்ள 2.0 படம், சீனாவில் ரிலிஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் 2.0. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை இந்தபடம், பெரியளவில் வசூலை அள்ளி கொடுத்தது. தற்போது இந்த படம் சீனாவில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் 12-ம் தேதி, சுமார் பத்தாயிரம் திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் 2.0 பாலிவுட் டைட்டிலான ரோபாட் 2.0 என்ற தலைப்புடன், சீனா மொழியிலும், ஆங்கில சப் டைட்டில் உடனும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சீனாவில் ஹெச்.ஓய் நிறுவனம் வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது....
சீனாவில் திரையிடப்பட உள்ள “பரியேறும் பெருமாள்”

சீனாவில் திரையிடப்பட உள்ள “பரியேறும் பெருமாள்”

Latest News, Top Highlights
சீனாவில் தற்போது நடந்து வரும் ஹைனன் தீவு சர்வதேச திரைப்பட திருவிழாவான ஸ்பிரிங் ஸ்கிரினிங்-னின் ஒரு பகுதியாக ஹைனன் தீவில் உள்ள ஐந்து நகரங்களில் கதிர், ஆனந்தி நடிப்பில், வெளியான பரியேறும் பெருமாள் படத்தை திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.  கதிர் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஆனந்தி நடித்திருந்தார். தவிர, யோகிபாபு, லிஜீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்தப் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்திற்காக பல இடங்களில் 2018 -ம் ஆண்டின் சிறந்த இயக்குநர் விருதைப் பெற்றார், மாரி செல்வராஜ். இந்தப்படம் இப்பொழுது கன்னடத்தில் ரீமேக் செய்யப்படவுள்ளது என்பது கூடுதல் தகவல்....