
அஜித்தின் குட் புக்கில் இடம்பெறுவது கடினம். இடம்பெற்று விட்டால் அதில் நிரந்தர இடம் உண்டு. அப்படி அஜித்தின் குட் புக்கில் இடம்பெற்றவர் விஷ்ணு வர்தன். ஆனால் அதை அவரால் தக்கவைத்து கொள்ளமுடியவில்லை என்று தான் சொல்லணும் காரணம் இந்த கூட்டணி மீண்டும் இணையும் என்று ஒவ்வொரு பட அறிவிப்புக்கு முன் பட்டியலில் வரும் ஆனால் டிக் மட்டும் ஆகாமல் இயக்குனர் சிவா அந்த இடத்தை பிடித்து நான்கு படங்களை இயக்கினார். அதுக்கு அடுத்து நேர்கொண்ட பார்வை மூலம் இயக்குனர் வினோத் பிடித்து விட்டார்.தற்போது மீண்டும் விஷ்ணுவரதனுக்கு வாய்ப்பு கிடைத்து இருப்பதாக செய்தி வந்துள்ளது .

இன்று வெளியாகி இருக்கும் நேர்கொண்ட பார்வை படத்தின் டைட்டில் கார்டில் விஷ்ணுவர்தனின் பெயர் வசன பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்தியில் இருந்து தமிழுக்கு வசனத்தை உயிர்ப்புடன் மாற்றி கொடுத்து இருக்கிறார். அஜித் அடுத்து எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்குகிறது. படத்தை அஜித்தின் பிறந்தநாளான மே 1ந்தேதி கொண்டு வர திட்டமிடுகிறார்கள்.
அதற்கு அடுத்து அஜித் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்க ஓகே சொல்லி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இது அஜித்தின் 61வது படமாக இருக்கும். இதை அடுத்த தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். அப்ப அஜித் ரசிகர்களுக்கு அடுத்த வருடம் இரட்டை ட்ரீட் என்று தான் சொல்லணும் .
