
ஜெயம் ரவி படத்திற்கு படம் ஏதாவது ஒரு வித்தியாசத்தை தேடி செய்து வருபவர். அந்த வகையில் இந்த முறை கோமாவில் இருந்து தன் பல வருட வாழ்க்கையை மறந்த ஒரு இளைஞனாக நடித்துள்ளார், இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே காணலாம்
கதை ஆரம்பமே 80களில் தொடங்குகின்றது, 90-ல் ஜெயம் ரவி பள்ளிக்கு செல்வது போல் காட்டுகின்றனர். பள்ளியில் தன்னுடன் படிக்கும் சம்யுக்தாவை ரவி காதலிக்கின்றார்.
அவரிடம் எப்படியாவது காதலை சொல்ல வேண்டும் என்று டிசம்பர் 31 அன்று செல்ல, அதே நாளில் பெரிய டான் ஒருவரை கொலை செய்து அந்த ஏரியாவில் தான் கிங்காக ஆகவேண்டும் என கே.எஸ்.ரவிக்குமார் திட்டம் தீட்டுகின்றார்.
ரவி காதலை சொல்ல, அதற்கிடையில் ரவிக்குமார் அந்த டானை கொன்றுவிட்டு ரவி, சம்யுக்தாவிற்கு பரிசாக கொடுத்த ஒரு சிலையை திருட்டிக்கொண்டு செல்கின்றார், அப்போது எதிர்ப்பாராத விதமாக ரவி மீது லாரி மோதி அவர் 16 வருடம் கோமாவிற்கு செல்கின்றார்.
கோமாவில் இருந்து 16 வருடங்கள் கழித்து ரவி எழ, அதன் பின் இந்த உலகமே அவருக்கு புதிதாக மாறுகின்றது, அந்த நேரத்தில் ரவிக்கு மிகப்பெரிய பணத்தேவை ஒன்று வர, ரவிக்குமார் ஜெயம்ரவியிடம் திருடி சென்ற சிலை, விலைமதிப்பற்றது.
அதை கைப்பற்றிவிட்டால், எப்படியாவது பணத்தேவையை பூர்த்தி செய்துவிடலாம் என ரவி திட்டமிடுகிறார் போடுகின்றார். இதிலிருந்து எப்படி மீண்டார் என்பதே படத்தின் மீதி கதை.
வித்தியாசமான கதைக்களம் தான் இந்த கோமாளி, கோமாவில் இருந்து எழுந்து, டிவியை பார்த்துவிட்டு இன்னும் சித்தி சீரியல் ஓடுகிறதா என்று கேட்பது, உன் கண் முன்னே ஒரு பெண்ணை கவர்கிறேன் என பள்ளிக்கூட பெண்ணிடம் பேசுவது என அசதியுள்ளார்.
படம் முழுவதுமே யோகிபாபு கவுண்டர் சிக்ஸர் தான், அதிலும் ஒரு மொக்கை ஜோக் நான் சொன்னது என சொல்லி அவர் கைத்தட்டல் வாங்கும் காட்சியெல்லாம் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கறது.
இந்த கோமாளி கான்செப்ட்-ஆகவெ எஒரு எக்ஸேட்மெண்ட் வரக்கூடியவை தான், நம் வாழ்க்கையில் திடீரென்று 16 வருடம் போக, தற்போதுள்ள வாழ்க்கையை பார்க்கும் போது ஒரு குழந்தை போல் தான் நம் மனநிலை இருக்கும், அதெ நேரத்தில் அந்த குழந்தை மனம் பலருக்கும் கஷ்டத்தையும் ஏற்படுத்தும் என்பதை காட்சிகள் வடிவில், அதுவும் காஜல் பேண்ட் கிழிந்துள்ளது என மறைப்பது, அவருக்கு முத்தம் கொடுப்பது என ஜெனேரேஷனை புரிந்துக்கொள்ளாமல் ரவி தவிக்கும் காட்சியும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
படத்தின் பிளஸ்: கான்செப்ட், யோகிபாபுவின் காமெடி, கிளைமேக்ஸ்
படத்தின் மைன்ஸ்: சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை
மொத்தத்தில் கோமாளி கண்டிப்பாக சிரிக்க வைக்கும். அனைவரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்.
