Sunday, June 21
Shadow

நடிகர் தேவ் ஆனந்த் பிறந்த தின பதிவு

தரம் தேவ் கிஷோரிமல் ஆனந்த் ஒரு பிரசித்தி பெற்ற இந்திய பாலிவுட் நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். தேவ் தனது மூன்று சகோதரர்களில் இரண்டாவதாக பிறந்தவர். அவரது மூத்த சகோதரர் சேதன் ஆனந்த் ஒரு திரைப்பட இயக்குனர் ஆவார், அதேபோல் அவரது இளைய சகோதரர் விஜய் ஆனந்தும் இயக்குனர் ஆவார். அவர்களின் சகோதரி, ஷீல் காந்தா கப்பூர், புகழ் பெற்ற ஹிந்தி மற்றும் ஆங்கில திரைப்படத்துறையின் இயக்குனர் சேகர் கப்பூரின் தாயார் ஆவார்.

பஞ்சாப் மாநிலம் பிரிக்கப்படுவதற்கு முந்தைய குர்தாஸ்பூர் மாவட்டத்தில் செல்வவளம் மிக்க வக்கீல் கிஷோரிமல் ஆனந்த் மகனாக தரம் தேவ் குந்தன் லால் கிஷோரிமல் ஆனந்த் பிறந்தார். லாகூரில்(தற்போது பாகிஸ்தானில்) உள்ள ஒரு அரசுக் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து இளங்கலைப்பட்டம் பெற்றார். நடிப்பின் மேல் அவர் கொண்டிருந்த காதல், சொந்த நகரைத் துறந்து இந்தி திரைப்படத்தொழிலின் மையமான மும்பை நோக்கி வரவழைத்தது. தேவ் தனது திரைப்படத்துறை வாழ்க்கையை மும்பை, சர்ச்கேட்டில் உள்ள இராணுவ சென்சர் அலுவலகத்தில் 160 ரூபாய் சம்பளத்தில் தொடங்கினார் .

1946 ஆம் ஆண்டு பிரபாத் டாக்கீஸ் தயாரித்த ஹம் ஏக் ஹே படத்தில் நடிகராகும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. புனாவில் படப்பிடிப்பு நடந்த பொழுது சகநடிகர் குருதத் அவருடன் தேவ் நட்பு கொள்ளலானார்.

எனினும் தேவிற்கு ஒரு மிகப்பெரும் திருப்புமுனை அசோக் குமாரால் வழங்கப்பட்டது. படப்பிடிப்புத் தளத்தில் சுற்றிக் கொண்டிருந்த தேவ் அவர்களை குமாரை பாம்பே டாக்கீஸ் தயாரித்த ஜித்தி(1948) திரைப்படத்தின் கதாநாயகராக ஆக்கி, காமினி கௌஷாலுடன் இணை நடிகராக்கி, இத்திரைப்படத்தை ஒரு வெற்றிப்படமாக்கினார். 1949 ஆம் ஆண்டில் தேவ் ஒரு தயாரிப்பாளராக மாறி சொந்தமாக நவகேதன் நிறுவனம் ஒன்றை உருவாக்கி அடுத்தடுத்து திரைப்படங்கள் தயாரிக்கும் பணியை தொடர்ந்து ஆற்றுகிறார்.

அதன் வெற்றியைத் தொடர்ந்து அவர் குரு தத் இயக்குனரோடு பாசி என்ற குற்றத் திகில் திரைப்படத்தை (1951) உருவாக்கினார். இந்த ஆக்கப்பூர்வமான கூட்டணிக்கு அதிர்ஷ்டம் அடித்து வெற்றி கண்டது; மேலும் சாகிர் லுதியானவி பாடலாசிரியரின் தட்பீர் சே பிக்டி ஹுயி தக்தீர் பனா தே…, என்ற பாடல் பிரபலமானது. இப்படம் தேவ் ஒரு உண்மையான நட்சத்திரம் என்பதை எடுத்துக்காட்டுவது போல் அமைந்தது.