
இயக்குனர் சுந்தர்.சி தன்னுடைய காமெடி டிராக்கை விட்டு இப்போது இயக்கியிருக்கும் படம் ஆக்ஷன். இந்த படத்தில் விஷாலை வைத்து எப்படிபட்ட ஆக்ஷன் திரைப்படத்தை கொடுத்துள்ளார், இதில் ஜெயித்துள்ளாரா என்பதை பார்ப்போம்.
விஷால் படத்தில் ஆரம்பத்திலேயே தமன்மாவுடன் ஒரு இண்டர்நேஷனல் கிரிமினலை பிடிக்கின்றார். அதை தொடர்ந்து கதை பின்னோக்கி செல்ல, விஷால் மிலிட்டரியில் பெரிய பதவியில் இருக்கிறார்.
அவருடைய அப்பா பழ.கருப்பையா தமிழகத்தின் முதலமைச்சர். விஷாலின் அண்ணன் ராம்கி அடுத்து முதலமைச்சராக தயாராக, இவர்கள் மத்தியில் ஒரு கட்சியுடன் ஒரு கூட்டணி அமைக்க பேச்சு வார்த்தை நடத்துகின்றனர்.
அதற்காக அந்த கட்சி தலைவர் தமிழகத்தில் மாநாடு நடத்த, அப்போது ராம்கி நண்பர் மூலமாக ஸ்டேஜில் பாம் வைத்து அந்த கட்சி தலைவரை கொள்கின்றனர்.
இந்த பழி விஷால் குடும்பத்தின் மீது விழ, இதன் உண்மையை அறிய உலகம் சுற்றி வில்லனை பிடிப்பதே இந்த ஆக்ஷன் கதை.
விஷால் படம் முழுவதும் ஓடுகிறார், தாவுகிறார், பறக்கின்றார் என்றாலும் தன் ஆறடி உயரம், துறுதுறு நடிப்பால் அனைத்தையும் நம்ப வைக்கின்றார். அதிலும் இடைவேளை காட்சியில் வரும் சண்டையில் வில்லியை பிடிப்பாரா? இல்லையா? என்று பதட்டத்தை உண்டாக்கும் வகையில் உள்ளது.
ஹீரோயினாகவும் விஷாலின் காதலியாகவும் வரும் ஐஸ்வர்யா லட்சுமி கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார்.
ஒவ்வொரு எபிசோடுக்கும் ஒவ்வொரு ஹீரோயின் என்பது போல் ஒரு எபிசோடில் தமன்னா, அவர் விஷாலை ஒரு தலையாக காதலித்தது மட்டுமின்றி அவருக்கு உதவியாகவே இரண்டாம் பாதி முழுவதும் வருகின்றார். சிறப்பாக ஏதும் இல்லை என்றாலும் பாஸ் மார்க் வாங்குகிறார்.
படம் இஸ்தான்புல், அல்கோர்னியா, லண்டன் ஏன் பாகிஸ்தான் வரை பயணிக்கின்றது, கொஞ்சம் விஜயகாந்த், அர்ஜுன் பட சாயல் அடித்தாலும் பிரமாண்ட லொகேஷன், அதிரடி சண்டைக்காட்சிகள் என சுந்தர்.சி ரசிக்க வைத்துள்ளார்.
படத்தின் பிளஸ்: சண்டைக்காட்சிகள், அதிலும் குறிப்பாக இடைவேளை காட்சி. ஒளிப்பதிவு
மைன்ஸ் : லாஜிக் மீறல் காட்சிகள்.
மொத்தத்தில் படத்தின் ஆக்ஷன் காட்சிகள் தூளாக இருப்பதால் ஆக்ஷன் பட ரசிகர்களை இந்த படம் வெகுவாக கவரும்.
