

மசாலா ஃபிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து M.K.R.P. புரொடக்ஷன்ஸ் வழங்கும் புதிய படம் ‘பிஸ்கோத்’. இதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இப்பொழுது தான் இப்படத்திற்கு பெயர் சூட்டியுள்ளார்கள்.
இதில் மூன்று தோற்றங்களில் சந்தானம் நடித்து அசத்தியிருக்கிறார். இப்படத்தில் இவருக்கு இரண்டு ஜோடிகள். சந்தானத்தின் வெற்றி படமான ‘A1’ நாயகி தாரா அலிஷா பெர்ரி மீண்டும் இவருடன் ஜோடி சேர்ந்துள்ளார். மற்றொரு நாயகியாக சுவாதி முப்பாலா அறிமுகமாகிறார். மேலும், ஆனந்த்ராஜ், ‘மொட்டை’ ராஜேந்திரன், ‘ஆடுகளம்’ நரேன், சிவசங்கர், ‘லொள்ளு சபா’ மனோகர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.400வது படமாக சவுகார்ஜானகி நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத்தில் இடைவிடாமல் நடைபெற்று முடிவடைந்தது. சுமார் ஒன்றரை கோடி செலவில் ஐதராபாத்தில் பிரம்மாண்ட அரண்மனை அரங்கு போடப்பட்டு 20 நாட்கள் படமாக்கப்பட்டது.
தெலுங்கில் சூப்பர் ஹிட் பாடலான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் இசை அமைப்மைப்பாளரான ரதன் இபடத்திற்க்கு இசையமைக்கிறார். அவரே பாடல்களும் எழுதியுள்ளார். நான்கு பாடல்களில் ஒரு பாடல் கிருதயா எழுதியுள்ளார்.
முழுக்க முழுக்க நகைச்சுவை தூக்கலாக இருக்கும். அத்தோடு காதல், ஆக்ஷன் என குழந்தைகள், குடும்பங்கள் ரசிக்கும் வண்ணம் கதை அமைந்துள்ளது. சந்தானம் ரசிகர்களை குஷிப்படுத்தும் கதை அம்சம் கொண்டதாக இருப்பதால் கோடை கொண்டாட்டமாகவே மார்ச் மாதம் இப்படத்தை வெளியிட இதன் உலக விநியோக உரிமைப் பெற்ற டிரைடண்ட் ஆர்ட்ஸ் கே.ரவீந்திரன் திட்டமிட்டுள்ளார்.
தயாரிப்பு, எழுத்து & இயக்கம் – ஆர்.கண்ணன்
இசை – ரதன்
ஒளிப்பதிவு – சண்முகசுந்தரம்
படத்தொகுப்பு – ஆர்.கே.செல்வா
கலை – ராஜ்குமார்
ஸ்டண்ட் – ஹரி
நடனம் – சதிஷ்
மக்கள் தொடர்பு – ஜான்சன்.
