Thursday, October 29
Shadow

சென்னையில் நாளை ஆரம்பிக்கும் சிம்புவின்“மாநாடு”. படபிடிப்பு

தமிழ் சினிமாவின் சிங்கிள் டேக் நடிகரான சிலம்பரசன், நடிக்க ஒப்பந்தமான திரைப்படம் “மாநாடு”. நடிகர் சிம்பு தேவையான ஒத்துழைப்பு கொடுக்காத காரணத்தினால் இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போனது. பல விவாதங்களுக்குப் பிறகு இந்த படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதியன்று ஆரம்பிக்கவிருந்தது.

ஆனால் தற்போது சிம்பு “எதுக்கு இன்னும் லேட் பண்றீங்க. நாளைக்கே படத்தை ஆரம்பிக்கிறோம்.” என்று அதிரடியாக கூறிவிட்டார். இதனால் ஆச்சரியமடைந்த “மாநாடு” படக்குழு இந்த படத்தின் முக்கியமான காட்சிகளை நாளை சென்னை மாநகரத்திலுள்ள ECR சாலையில் படமாக்கவுள்ளனர். இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இரண்டு நாட்கள் இந்த ஷூட்டிங் நடந்து முடிந்தபின், பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து ஐம்பது நாட்கள் ஹைதெராபாத் நகரத்திலுள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடக்கப்போவதாக படக்குழு திட்டமிட்டு வருகின்றன. மேலும் இந்த படம் ஜூன் மாதத்தில் திரையிடத் திட்டமிட்டு வருகின்றனர்.