Saturday, November 7
Shadow

கொரானா தொற்றால் பிரபல ஹாலிவுட் நடிகை மரணம்

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி ஹாலிவுட் நடிகர், நடிகைகள் தொடர்ந்து பலியாகி வரும் நிலையில் முதன் முதலாக இங்கிலாந்து நடிகை ஹிலாரி ஹீத்தும் பலியாகி உள்ளார்.74 வயதான ஹிலாரிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதனை அவரது மகன் அலெக்ஸ் வில்லியம் அறிவித்துள்ளார். 1968ம் ஆண்டு வெளியான விச்பைண்டர் படத்தின் மூலம் அறிமுமான ஹிலாரி, 50க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். தி பாடி டீலர்ஸ், டூ ஜென்டில்மேன் ஷேரிங், க்ரைம் ஆப்தி பான்சிஸ் ஆகியவை முக்கியமான படங்கள்.