Saturday, November 7
Shadow

கர்ம வீரர் காமராஜ் தமிழக முதல்வராக பத்வியேற்ற நாள் அவரை பற்றிய ஒர் சிறு உதாரணம்

திருநெல்வேலியில் ரத்னா, பார்வதி திரையரங்கம் நமக்கு வெறும் திரையரங்கமாக மட்டும் தான் தெரியும் அதன் பின்னால் காமராஜர் திரையரங்க உரிமையாளரிடம் பேசிய பெரிய டீல் என்னவென்று தெரியுமா..??? இந்த இரண்டு திரையரங்கத்தின் உரிமையாளர் முனைஞ்சிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் இவர் திரையரங்கத்தை கட்டிவிட்டு அனுமதி பெற அப்போது முதல்வராக இருந்த காமராஜரிடம் சென்றார் ஆனால் அவரோ உடனே அனுமதி கொடுக்கவில்லை.. நான் திரையரங்கிற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்றால் நீங்கள் இரண்டு பள்ளிகூடங்கள் கட்ட வேண்டும் அப்படி கட்டி வாருங்கள் அப்போது நான் அனுமதி கொடுக்கிறேன் என்றார்.

அவர் சொன்ன படியே முனைஞ்சிபட்டியில் ஒரு பள்ளியையும் நாங்குநேரியில் ஒரு பள்ளியையும் கட்டி முடித்துவிட்டு காமராஜரிடம் சென்றார். அப்போது காமராஜர் அனுமதி கொடுத்தது மட்டுமல்லாமல் நேரில் வந்து இந்த இரண்டு பள்ளிகளையும் திறந்தும் வைத்தார் காமராஜர். இன்று அந்த பள்ளிகளில் 2000 க்கும் மேலான மாணவர்கள் படிக்கின்றார்கள். ஒரு கட்டடத்திற்கு இவ்வளவு தொகை லஞ்சம் வேண்டும் என கேட்கும் ஆட்சியாளர்கள் மத்தியில் காமராஜர் முற்றிலும் வித்தியாசமானவர் (இன்னிக்குதான் காமராஜர் முதல்வரா பொறுப்பேற்றாராக்கும்)

இதே பார்வதி தியேட்டர் பணிகள் முடியாமல் அவசரஅவசரமாக காமராஜர் நெல்லை வரும்போது திறக்க ஏற்பாடு நடந்தது. ஆனால் அப்போதைய கலெக்டர் பணிகள் முடிவடையாமல் தியேட்டரை திறக்க அனுமதி தர முடியாது என்று மறுத்துவிட்டார். முதலமைச்சரே வந்து திறக்கிறார் என்று சொல்லியும் பிடிவாதமாக மறுத்துவிட்டார். விஷயம் காமராஜருக்கு போனது. காமராஜர் சற்றும் யோசிக்காமல் நேரடியாக கலெக்டர் வீட்டுக்கே சென்று அவரது மன தைரியத்தை பாராட்டி விட்டு சென்றார்.

கொசுறு தகவல் : பார்வதி தியேட்டரில் முதன்முதலில் திரையிடப்பட்ட திரைப்படம் ஜெமினி கணேசன் நடித்த இரும்புத்திரை)