![]()
மாநாடு- படத்துக்காக சிம்பு-வை பெண்ட் எடுத்து வரும் வெங்கட் பிரபு, இதே சிம்புவை வச்சி நெக்ஸ்ட் மூவி டைரக்ட் பண்ணப் போறதா சொல்லி வந்த வெங்கட் பிரபு இப்போ ஹெவி டென்ஷன் -னால் புதுப் படத்தை இயக்க முடியாது என்று சொல்லி விட்டாராம்.
அதாவ்து டி.ஆர் சமீபத்தில் ஆறேழு பேரை போட்டு ‘தமிழ்நாடு மூவி மேக்கர்ஸ் சங்கம்’ அப்ப்டீன்னு ஆரம்பிச்ச சங்க நிதிக்காக சிம்பு ஒரு படத்தில் நடிப்பாருன்னு டி.ராஜேந்தர் தன் மனைவி உஷா சம்மதம் வாங்கி சொன்னவுடன் இந்தப் புது படத்திற்கான வேலைகளும் மும்முரமாக நடந்து வந்துச்சு.
முதலில் ‘மாநாடு’ படத்தை முடித்துவிட்டு இந்தப் படத்தை வெங்கட் பிரபுவே இயக்க போறதா தகவல் வந்துச்சு .
ஆனா, இப்போ மாநாடு இன்னும் கொஞ்ச நாட்கள் ஷூட் நடத்த வேண்டியதாலும் அதை தொடர்ந்து போஸ்ட் புரொடெக்சன்ஸ் வேலைகளில் மூழ்க வேண்டியதிருப்பதாலும் தனக்கு மறுபடியும் சிம்பு-வை டைரக்ட் செய்ய நேரம் இருக்காது அப்ப்டீன்னு சொல்லிட்டாராம்.
