Thursday, April 23
Shadow

கடவுள் இருக்கான் குமாரு – திரைவிமர்சனம் நிச்சயம் குமார் உங்களை சிரிக்க வைப்பான்

ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி M. S.பாஸ்கர், ஊர்வசி, சிங்கம் புலி, ரோபோ சங்கர், பிரகாஷ்ராஜ் கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன், ஐஸ்வர்யா, மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த படத்துக்கு ஹீரோ ஜி.வி.பிரகாஷ் தான் இசையும் படத்தை அம்மா கிரியேஷன் T.சிவா இந்த படத்தை தயாரித்துள்ளார். முக்கோண காதல் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் தான் ‘கடவுள் இருக்கான் குமாரு’. இப்படம் இன்று வெளியாகியுள்ளது. ராஜேஷ் – ஆர்.ஜே.பாலாஜி கூட்டணி என்பதால் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

அந்த எதிர்பார்ப்பு படம் ஆரம்பித்த முதல் காட்சில் இருந்து கடைசி காட்சி வரை அதை இயக்குனர் ராஜேஷ் நிலைநிறுத்தியுள்ளார் என்று சொல்லணும். விழுந்து விழுந்து ஆனந்தியை காதலிக்கிறார் ஜி.வி. இருவருக்கும் காதல் ஏற்படுகிறது மதம் என்ற போர்வையில் காதலை பிரிக்கிறார் M. S.பாஸ்கர் இதனால் பிரிந்த காதல் மீண்டும் எப்படி சேருகிறார்கள் என்பது தான் கதை பிரிந்த கேப்ல பெரியோர்களால் நிக்கி கல்ராணியை திருமணம் செய்ய பார்கிறார்கள். இங்க இருந்து தான் படத்தின் கதை காமெடி கலாட்டா ஆரம்பம் இதில் யார் கரம் பிடிக்கிறார் என்பது தான் மீதி கதை

ஜி.வி.பிரகாஷ் வழக்கம்போல் நண்பர்களோடு அரட்டையடிப்பது, நாயகிகளுடன் இணைந்து டூயட் ஆடுவது என்பது இல்லாமல் இப்படத்தில் கொஞ்சம் நன்றாகவே நடித்திருக்கிறார். நீண்ட வசனங்களைக்கூட அசால்ட்டாக பேசி அசர வைக்கிறார். நிக்கி கல்ராணி, ஆனந்தி என இரு கதாநாயகிகளுடன் நெருங்கி நடிப்பதில் எந்தவித தயக்கமும் இல்லாமல் தாராளமாக நடித்திருக்கிறார்.

இயக்குனரின் ஒரே கவனம் காமெடி தான் நம் தாரக மந்திரம் என்று சும்மா கலகலவென சிரிக்கவைதுள்ளார். அதுவும் ஊர்வசி வரும் பகுதி அரங்கமே சிரிப்பால் அதிருது என்று தான் சொல்லணும் அதே போல் சிங்கம் புலி ரோபோ ஷங்கர் பிரகாஷ் ராஜ் இந்த மூவர் கூட்டணி அடேங்கப்பா இன்னும் ஆர்பாட்டம் அமர்களம் குறிப்பாக சிங்கம்புலி ரோபோ செய்தி வாசிப்பது அருமை லாஜிக் எல்லாம் இல்லாமல் வெறும் காமெடி மாஜிக் மட்டும் தான் படம்
ஆர்.ஜே.பாலாஜி நிச்சயம் சந்தானத்தை ரீப்ளேஸ் செய்வார் என்று சொல்லணும் படத்துக்கு பெரிய பலம் என்றால் அது ஆர்.ஜே.பாலாஜி அவருக்கான ஸ்பேஸில் அவர் நன்றாகவே செய்திருக்கிறார். அவரை விடவும் படத்தில் ஸ்கோர் செய்வது பிரகாஷ்ராஜ்தான்.

படத்திற்கு மற்றொரு பெரிய பலம் பிரகாஷ் ராஜ். காமெடி கலந்த வில்லத்தனத்தில் கலக்கியிருக்கிறார். ரொம்பவும் எதார்த்தமான நடிப்பில் அசர வைக்கிறார். அவருக்கு ரோபோ சங்கரும், சிங்கம் புலியும் கைகொடுத்து உதவியிருக்கிறார்கள். பேசுவதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை நடத்தும் ஊர்வசியும், அந்த நிகழ்ச்சியை நடத்தும் இயக்குனராக வரும் மனோபாலாவும் நகைச்சுவையில் வயிறு குலுங்க வைத்திருக்கிறார்கள்

படத்தில் இரண்டு குயின்கள். நிக்கி கல்ராணி, ஆனந்தி. இருவருமே அவர்களுக்கு இயக்குனர் கொடுத்தை வேலையை மிகவும் நன்றாக செய்துள்ளனர். ஆனந்திக்கு மேக் அப் போட்டவரை மட்டும் கொஞ்சம் சுத்தி போடணும் அந்த அளவுக்கு பட்டை தீட்டியுள்ளார். நடிப்பில் ஆனந்திக்கு சொல்லவாவேனும் இந்த படம் மூலம் காமெடியும் என்னால் பண்ண முடியும் என்று செய்துள்ளார் . இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு முக்கிய பிளஸ் என்று சொல்லணும் பாடல்களும் சரி பின்னணி இசையுளும் மிகவும் அற்புதம்

கடவுள் இருக்கான் குமாரு கண்டிப்பாக உங்களை கை விடமாட்டன் அந்த அளவுக்கு கவலையை மறந்து சிரித்து ரசித்து அரங்கத்தை விட்டு வெளியேருவிங்க என்பதுக்கு முழு உத்திரவாதம் படம் பார்த்த சில நாட்களுக்கு வீட்டில் அமர்ந்து டிவி பார்க்கும் போது சிரிபிங்க அந்த அளவுக்கு சில காட்சிகள் உங்களை சிரிக்க வைக்கும்.

RANK 5/3.5

Leave a Reply