Wednesday, October 28
Shadow

கர்நாடக சங்கீத பீஷ்மர் பாலமுரளி கிருஷ்ணா மறைவுக்கு நடிகர்சிவகுமாரின் கண்ணீர் அஞ்சலிசெய்தி

பால முரளி கிருஷ்ணா அவர்கள் கர்நாடக சங்கிதத்தில் ஒரு பீஸ்மர் என்று சொல்லலாம் அகில இந்திய அளவில் உயரிய மத்திய அரசு விருதுகளை வாங்கியுள்ளார். அப்படி பட்ட மனிதர் சினிமாவுக்கு வருவதை விரும்பமாட்டார்கள் ஆனால் அதையும் தாண்டி அந்த மாமனிதர் அருட்செல்வர் A.P.நாகராஜன் அவர்களின் வேண்டும்கோல் ஏற்று திருவிளையாடல் படத்துல T.S. பாலையா அவர்களுக்கு ஒரு நாள் போதும்மா இன்று ஒரு நாள் போதும்மா. என்ற பாடலை பாடினார் அந்த படம் வெற்றி படம்மாக ஓடிதற்கு அந்த பாடல் 25% சதவிகிதம் காரணம்மாக அமைந்தது ஏன் என்றால் மாறுபட்ட குரல் மேலும் T.S.பாலையா வின் நடிப்பு. அதன் பிறகு அவர் வேறு நடிகர்களுக்கு டூயட் பாடியதாக எனக்கு ஞாபகம் இல்லை ஆனால் இளையராஜா இசையில் கவிகுயில் படத்தில் எனக்காக அவர் பாடினார் சிக்மகளூர் அதிகாலை 3 மணியளவில் முடுகர என்னும் இடத்தில் நானும், ஸ்ரீதேவியும் கிருஷ்ணார் ,ராதா வேடத்தில் நடித்தோம் அந்த பாடல் சின்ன கண்ணன் அழைகிறான் என்கிற பாடல்காட்சிகள் எடுத்தோம். அந்த பாடல் தமிழ்சினிமா ராசிகர்கள் அனைவரும் மரக்க முடியாத பாடல் அந்த மாமனிதர் எனக்காக பாடினார் அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று இறைவனை வேண்டி கொள்கிறேன்.

Leave a Reply