Saturday, April 18
Shadow

முதல் முறையாக விக்ரம் படத்துக்கு இசையமைக்கும் அனிருத்

இரு முகன் படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம்,எந்த படத்தில் நடிக்க போகிறார் என்பது மிக பெரிய கேள்வி குறியாக இருந்தது ஒரு வழியாக விஜய் சந்தர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்
வெளியானது. இவர் சிம்புவை வைத்து வாலு படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. வாலு பாணியில் இதுவும் ஒரு கமர்ஷியல் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க ப்ரேமம் புகழ் சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். அதேபோல் அனிருத் முதல்முறையாக விக்ரம் படத்துக்கு இசையமைப்பார் என கூறப்படுகிறது. இப்படம் குறித்த அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply