Wednesday, October 28
Shadow

‘கத்தி சண்டை’ – திரைவிமர்சனம் காமெடி சண்டை. Rank 5/2.5

படத்தின் ஆரம்பத்தில் கண்டெயினரில் வருகின்ற பணத்தை மடக்கி அதனை கவர்மெண்டிடம் ஒப்படைக்கிறார் போலீஸ் அதிகாரி ஜெகபதி பாபு. அதற்கு அடுத்த காட்சியில் நாயகன் விஷால் என்ட்ரி ஆகிறார். அப்பாவியாக வரும் நாயகன் விஷால், நாயகி தமன்னாவைக் காதலிக்க அவருக்கு பல்வேறு சோதனைகள் நடத்தி தனது தங்கையின் மாப்பிள்ளையாக தேர்வு செய்கிறார் ஜெகபதி பாபு.

திடீரென ஜெகபதி பாபுவை ஒரு கும்பல் கடத்தி விடுகிறது. அந்த கும்பல் ஜெகபதி பாபுவிடம் 10 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டுகின்றனர். பணம் கொடுக்கவில்லையென்றால் உனது குடும்பத்திற்கு தான் பாதிப்பு என அந்த கும்பல் ஜெகபதி பாபுவை மிரட்ட, அவர் விஷாலுக்கு போன் செய்து வீட்டின் குறிப்பிட்ட பகுதியில் உள்ள டைல்ஸ்க்கு அடியில பணம் இருக்கு எடுத்து வா எனக் கூறுகிறார். ஜெகபதி பாபு கூறியதுபோல பணத்தை எடுத்து செல்லும் விஷால் பணத்தைக் கொடுக்காமல் வில்லன்களிடம் சண்டை போட்டு ஜெகபதி பாபுவைக் காப்பாற்றி விடுகிறார்.

விஷால் திடீரென ஒருநாள் ஜெகபதி பாபுவிடம் நான் ஒரு சிபிஐ அதிகாரி அன்னைக்கு வந்த கண்டய்னர்ல 300 கோடி பணம் வந்தது. ஆனால் நீ கவர்மெண்டிடம் ஒப்படைத்தது வெறும் 50 கோடிதான் என்று தனது ஐடி கார்டைக் காட்டி மிரட்டுகிறார்.

இதற்கிடையில் வில்லன் தருண் அரோரா, ஜெகபதி பாபு இருவரும் ஓரிடத்தில் சந்திக்கின்றனர். அப்போது தருண் அரோரா ஜெகபதி பாபுவிடம் நீ நினைக்கிற மாதிரி விஷால் சிபிஐ ஆபிசர் கிடையாது. அவன் என்கூட தான் ஜெயிலில் இருந்தான். கண்டெயினரில் வந்த பணத்தைக் கொள்ளையடிக்க நான் திட்டம் போட்டேன். ஆனால் அவன் என்னோட திட்டத்தை ஒட்டுக்கேட்டு எனக்கு முன்னால வந்து உன்ன மிரட்ட ஆரம்பிச்சிட்டான் என்று கூறுகிறார். இதற்குப்பின் ஜெகபதி பாபு, தருண் அரோரா இருவரும் விஷாலைத் தேடி வருகின்றனர்.

அதே நேரத்தில் விஷால் யார்? என்னும் விவரம் நாயகி தமன்னாவிற்கு தெரிந்து விடுகிறது. இதனால் விஷாலிடம் தமன்னா சண்டை போட விஷால்-தமன்னா இருவருக்குமான காதலில் விரிசல் விழுகிறது.

திடீரென நடைபெறும் சிறிய விபத்தில் நாயகன் விஷால் தனது நினைவுகளை இழந்து விடுகிறார்.விஷால் இழந்துவிட்ட பழைய நினைவுகளை மீட்க வரும் டாக்டராக வைகைப்புயல் வடிவேலு இரண்டாம் பாதியில் என்ட்ரி ஆகிறார்.

இழந்த நினைவுகளை விஷால் மீண்டும் பெற்றாரா? உண்மையில் விஷால் யார்? தமன்னா-விஷால் இருவரும் ஜோடி சேர்ந்தார்களா? என்பதே மீதிக்கதை.

நாயகன் விஷால் தமிழ் சினிமாவி இருக்கும் அவருக்கான இடத்தை இந்த படம் மூலமும் தக்கவைத்து கொண்டார் என்று தான் சொல்லணும் ஆடம் பட்டம் காமெடி அதிரடி சண்டைகாட்சிகள் இப்படி எல்லாத்திலும் கொடுத்த வேலையை நிறைவாக செய்து இருக்கிறார் ரசிக்கவும் செய்து இருக்கிறார்.

படத்தின் நாயகி தமன்னா தன்னை நம்பியதைவிட தன் கவர்ச்சியை நம்பி அள்ளி தெறித்து இருக்கிறார் என்று தான் சொல்லணும் கடந்த படங்களில் அவர் யார் என்று நிரூபித்தார் ஆனால் இந்த படத்தில் தன் கவர்ச்சியின் மூலம் ரசிகர்களை திணறடிக்கிறார் .

படத்துக்கு மிக முக்கிய பலம் என்றால் அது சூரி தான் முதல் பாதி படத்தை சூரி சும்மா ரசிக்க சிரிக்க வைக்கிறார் அவர் வரும் காட்சியெல்லாம் சிறக்க கூடாது என்று சபதம் எடுத்து இருந்தாலும் நம்மால் முடியாது நாம் சிரித்து விடும் அந்த அளவுக்கு காமெடியும் அவரின் கெட்டப் ரசிக்க வைக்கிறது.

இரண்டாம் பாகம் வைகை புயல் வடிவேலு வருகிறார் ஐவரும் இவர் பங்கை சிறப்பாக செய்துள்ளார் ஐ அம் பேக் என்று என்ட்ரிலே நம்மை அசத்துகிறார் எங்கு இருந்து இவர்க்கு என்று விக் கிடக்குது என்று தெரியவில்லை ஆனாலும் சூரி கொஞ்சம் நிமிர்ந்து நிற்கிறார் .

இயக்குனர் சுராஜ் எப்பவும் போல அக்ஷன் காமெடி என்று சும்மா கலக்கி இருக்கிறார் இந்த முறை கதையிலும் சிறப்பாக கவனம் செய்தது இருக்கிறார் என்று சொல்லவேணும் முக்கியமாக திரைகதை படு வேகம் இதுவே படத்துக்கு மிக பெரிய பலம் .

ஹிப்ஹாப் ஆதியின் இசையில் ‘நான் கொஞ்சம் கருப்பு தான்’ பாடல் காட்சி ரசிக்க வைக்கின்றது. மற்ற பாடல்கள் எதுவும் மனதில் ஒட்டவில்லை. பின்னணி இசையில் ஹிப்ஹாப் ஆதி ஸ்கோர் செய்கிறார். பாடல், சண்டைக்காட்சிகளுக்கு ஒளிப்பதிவாளர் ரிச்சர்டு எம்.நாதன் தனது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.

மொத்தத்தில் ‘கத்தி சண்டை’ காமெடி சண்டை. Rank 5/3.5

Leave a Reply