
பொங்கல் பண்டிகை பாக்ஸ் ஆபீஸ் கலெக்க்ஷன் தமிழ்நாட்டு திரையரங்குகள் மூலம் சுமார் 50 கோடி என்பது தோராயமான கணக்கு. இதனை குறிவைத்து பெரிய பட்ஜெட் படங்களை தயாரிப்பாளர்கள் ரீலீஸ் செய்வார்கள். இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு 2 நாட்களுக்கு முன்பாக ஜனவரி 12 அன்று விஜய் நடித்த “பைரவா ” படம்ரீலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் G. V.பிரகாஷ் குமார் நடித்துள்ள “புரூஸ்லீ ” பொங்கல் அன்று வெளிவருகிறது. இந்த இரண்டு படங்களை தவிர்த்து விஜய் சேதுபதி நடித்துள்ள ” புரியாத புதிர் “வருகிறது். அதிக திரையரங்குகள் கிடைத்தால் மட்டுமே ” பார்த்திபன் ” இயக்கியுள்ள “கோடிட்ட இடங்களை நிரப்புக” படம் ரீலீஸ்என்று நடிகர் பார்த்திபன் விநியோகஸ்தர்களைபதற, வைத்து கொண்டிருக்கிறார். 2016 தீபாவளிக்கு சிங்கம் – 3 ரீலீஸ் என அறிவித்து கத்தி சண்டை படத்தைதீபாவளி ரீலீஸ் ரேஸிலிருந்து பின்வாங்க வைத்து தீபாவளி ரீலீசில் “காஸ்மோரா ” படத்துக்கு கஷ்டம் வராமல் பாதுகாத்தார் ஞானவேல்ராஜா. சிங்கம் – 3டிசம்பர் ரீலீஸ் என அறிவித்து போகன் படத்தை தள்ளி போக வைத்த ஞானவேல்ராஜா மூன்றாவது முறையாக ஜனவரி 26 சிங்கம் – 3 ரீலீஸ் என அறிவித்து பொங்கல் அன்று வெளியிட திட்டமிட்டிருந்த பல படங்களின் தயாரிப்பாளர்களின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளார்.இருந்தாலும் சிவலிங்கா, போகன்இரு படங்களையும் ரீலீஸ் செய்வதில் தயாரிப்பாளர்கள் உறுதியாக இருப்பதாக தகவல். எந்த படமும் சொல்கிறதேதியில் வரும் என்பதற்கு தமிழ் சினிமாவில் உத்திரவாதம் இல்லாத சூழல் நிலவுவதால் யூகத்தின் அடிப்படையிலான ஜனவரி மாத ரீலீஸ் பட்டியல்.
5.1.17- சூப்பர் போலீஸ்
6.1.17- சூரத் தேங்காய்
6.1 17-பச்சை கிளிபரிமளா
12.1.17- பைரவா
13.1.17- புரியாத புதிர்
13.1.17- கோடிட்ட இடங்களை நிரப்புக
14.1.17- புருஸ்லீ
26.1.17- சிங்கம் – 3
26.1.17- போகன்
26.1.17- சிவலிங்கா
26.1.17- நெஞ்சம் மறப்பதில்லை
