
விஜய் முன்பு போல் இல்லை என்று தான் சொல்லணும் முன்னாடி ஒரு படம் முடித்து விட்ட பின்புதான் அடுத்த படத்தை பற்றி அறிவிப்பார் ஆனால் தற்போது அப்படி இல்லை ஒரு படம் முடிப்பதற்குள்ளே அடுத்த படத்தின் அறிவிப்பு கசிய ஆரம்பித்துள்ளது . விஜய் 62 படத்தின் செய்திகள் கசிய ஆரம்பித்துள்ளது.
விஜய் கேரியரில் பெரும் திருப்புமுனையை கொண்டுவந்த படங்கள் துப்பாக்கி, கத்தி. இந்த இரண்டு படங்களையுமே இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ்தான். இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணையவேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்நிலையில் அண்மையில் இவர்கள் இருவரும் சந்தித்து மீண்டும் ஒரு படம் செய்வது குறித்து பேசியதாக தகவல் கசிந்துள்ளது. இப்படத்தை விஜய்யின் அப்பா சந்திரசேகர் அல்லது தனுஷ் இருவரில் ஒருவர் தயாரிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது
