Saturday, April 18
Shadow

இணையதளத்தில் வெளியான பைரவா பட குழுவினர் அதிர்ச்சி

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘பைரவா’. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் வெளியாயுள்ள இப்படத்தை விஜயா வாஹினி நிறுவனம் தயாரித்துள்ளது. ஸ்ரீக்ரீன் நிறுவனம் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிட்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. மேலும், படத்தின் முதல் நாள் வசூல் தமிழகத்தின் முந்தைய விஜய் படங்களின் சாதனையை முறியடிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ‘பைரவா’ வெளியான முதல் நாளே இணையத்தில் முழுப்படமும் வெளியானது. 3GP, Mp4, Single Print என பல்வேறு வடிவங்களில் வெளியாகியிருப்பதைப் பார்த்து படக்குழுவினர் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். மேலும், இவற்றை நீக்குவதற்காக படக்குழுவினர் தீவிர முயற்சி செய்து வருகிறார்கள்.

Leave a Reply